பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. காலெறி கடிகையார்

மணந்து மனேவியோடிருந்து மகிழ்ந்து வாழும் தலே மகன் ஒருவன், ஈந்து இசைபட வாழும் பெருவாழ்வு வாழ எண்ணினுன் ; அதற்குப் பெரும்பொருள் தேவை என் பதையும் உணர்ந்தான்் ; இயல்பாகவே அவன் பெரும் பொருள் உடையவன்; எனினும், தன் வாழ்க்கைக்காம் பொருளைத் தான்ே தேடிப் பெறல்வேண்டும் என்று எண் அனும் உயர் பேருள்ள முடையவன்.

தெண்ணிர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்.’ - - (திருக்குறள் : கப்சுடு) என்ற குறளு ைஉணர்ந்தவன்; ஆதலின் பொருள்தேடிப் பிறநாடு செல்ல எண்ணின்ை ; அங்கிலையில், அவன் மனேவி யின் பேரழகும், அவள் தரும் பேரின்பமும் அவன் உள் ளத்தே உருப்பெற்று கிற்கலாயின; வளையணிந்து வனப் பில் மிகுந்து இளமை எழில் தோன்ற கிற்கும் அவள் அழகு அவன் கண்ணிற்கு விருந்தாய் அமைந்தது; அவ் வழகு, அவள் தரும் இன்பத்தையும் கினைப்பூட்டிற்று ; அவள் வாயில் ஊறும் உமிழ்நீர் தரும் இன்பத்தை எண்ணி ன்ை ; பொருள்கருதிப் பிறநாடு சென்றுவிட்டால் இவ் வின்பத்தை இழக்கவேண்டி வருமே என்று எங்கினன்; பொருள்பெற்று மீண்டுவந்து இல்வாழ்க்கையின் ப்யன் துய்க்கலாம் எனில் அஃது இயலாது; இளமை கழிந்த பின்னர் இருந்து துய்க்கும் இன்பம் இன்பமாகாது; இளமையிற் சிறந்த வளமையும் இல்லை; இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்று; இளமை கெடிதுநாள் நிற்பதும் இல்லை; இன்பம் துய்க்கவேண்டும் என்ற எண்ணம், இளமை தீர்ந்த பின்னர் எழலும் அரிது; மேலும் இளமை கழிந்தபின்னர் இன்ப உணர்வினராதலும் அத்துணைச் சிறப்புடையதாகாது; ஆனால் இன்ப நுகர்ச் சிக்கு இளமைபோல், பொருளும் இன்றியமையாததாம்.