பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையாற் பெயர்பெற்ருேர்

ஒருவர் உணர்ந்து, இருமையில் ஒருமையுண்டு என உணர வைக்கும் செயல், பகைத்துப் பெரும்படைகொண்டு களத்தே கிற்கும் காவலர் இருவரிடையேயும் மாறி மாறிச் சென்று, அவர் மன இருள் போக்கி மாறுபாட்டை நீக்க முயலும் அறிவுடையோர் செயல்போல் அருமையுடைய தா.ம. х

‘இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்ருேர் போல இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலேன்'

(குறிஞ்சிப் பாட்டு: உஎ - க) என்றுகூறி விளக்குகிருள் மற்றொரு தோழி.

இத்தகைய அறிவுடைய தோழியின் உள்ளத் துடிப் பினே உள்ளவாறு உணர்த்தத், தான்் பெற்ற இரட்டைப் பிள்ளைகள் ஒரேகாலத்தில் நஞ்சுண்டமை அறிந்து, அது தீர்க்கும் வழிவகை காணத் துடிக்கும் தாயின் உள்ளத் துடிப்பை உவமை கொண்ட அருமை அறிந்து, அப் பாடலைப் பாடிய புலவர்க்குக் கவைமகனுக் என அவ்வுவமை யினேயே பெயராக ஆக்கி மகிழ்ந்த அறிவுடையோர்க்கு அறிவுடை உலகம் தலைவணங்கி வாழ்த்து அளிக்குமாக.