பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவைமகனுர் 49

அடக்கி, அரியவழிகளையும் அஞ்சாது கடக்கும் ஆற்றலும் துணிவும் உடைய ஆண்மகனுகிய அவனே வெற்றிகொண்டு, அவர்கள் இருவரும் அறவாழ்வு வாழத் துணைபுரியும் தோழியின் அறிவுடைமையினையும், கடமை யுணர்ச்சி யினையும் கண்டு மகிழ்க:

' கொடுங்கால் முதலேக் கோள்வல் ஏற்றை

வழிவழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறை இன மீன் இருங்கழி நீந்தி,நீ நின் நயனுடை மையின் வருதி, இவள்தன் மட னுடைமையின் உயங்கும்; யான் அது கவை மக நஞ்சுண் டாஅங்கு அஞ்சுவல் பெரும என் நெஞ்சத் தான்ே.”

(குறுங் : க.உ.ச.)

இப்பாட்டில், தலைவன், தலைவி இருவரின் உள்ளத் துடிப்பினையும் உணர்ந்துள்ளமையால், எதுவும் செய்ய மாட்டாது, வருந்தும் தன் கிலேக்கு, இரட்டைக் குழந்தை களே யுடையாள் ஒருதாய், அவ்விரு குழந்தைகளும் ஏக காலத்தில் நஞ்சுடைப் பொருளே உண்டக்கால், இந்தக் குழந்தையைக் கவனிப்பதா அந்தக் குழந்தையைக் கவனிப்பதா நஞ்சுதீர் மருந்தை இந்தக் குழந்தைக்கு முதலில் அளிப்பதா? அந்தக் குழந்தைக்கு முதலில் அளிப் பதா ? என அறியாது துடிக்கும் துயர்நிலையினே உவமை காட்டித் கன் உள்ளத்துடிப்பைத் தோழி ஒருவாறு உணர்த்தியுள்ளாள் ; இருவரில் ஒருவர்பாற் சென்ற உள்ளம் இன்றி, நடுவுகின்ற கல்நெஞ்சினாய் கடமை யுணர்ச்சி கொண்டு வாழும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இத்தகைய போராட்டம் உருப்பெறுதல் உறுதி. இத் தகைய உள்ளப் போராட்டம் உடையவரே, உண்மையில் உயர்வுடைய மக்களாகவும் மதிக்கப் பெறுவர்.

இவ்வாறு இருவர் நிலையினையும் உணர்ந்து, இருவர்க் கும் ஏற்றதொருவழியைக் காணல் எத்துணை அரிய செயல் என்பதை, மாறுபட்டார் இருவர், ஒருவர் உள்ளத்தை

4 س, لام) ، سيع