பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலெறி கடிகையார் 53

என அழைப்பதும் காண்க. இக்கரும்பு புலவர்களின் உள்ளத்திறகும் சுவை தந்துளது; அவர்கள் தாம் பாடிய பாடல்களில் வேண்டிபாங்கு எடுத்து ஆண்டு போற்றுவர். நண்பர்கள் இயல்பை விளக்கப் புகுந்த புலவர் ஒருவர், ால்லோர் நட்பு கரும்பை துனியில் தொடங்கித் தின்று கொண்டே சென்றால், முதலிற் சுவை குறைந்து, வரவர மிகுவதுபோல், பழகப் பழக இன்பம் மிகுந்துகொண்டே செல்லும். தீயோர் நட்பு கரும்பை அடியிற்ருெடங்கித் தின்றுகொண்டே சென்றால், தொடக்கத்தில் பேரினிப் புடையதாய் வாவர இனிமை குறைந்து போவதேபோல், தொடக்கத்தில் நன்ருய் இறுதியில் தோய் முடியும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு, கரும்பில் அதன் அடிப்பகுதியே மிக்க சுவை உடையது என அறிந்த நம் தலைமகன், தன் மனைவி யின் வாயில் ஊறும் நீருக்கு, கரும்பின் அடிப்பகுதியின் மிக்க சுவையினை உவமை கூறுகின்ருன்.

இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெருவளம் ஒருங்குடன் இயைவதாயினும், கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்றன்ன வாலெயிறு ஊறிய வகையில் தீநீர்க், கோலமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய, ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும் உறன்முறை மாபின் கூற்றத்து அறனில் கோள்கற் கறிந்திசி னோே , (குறுங். உசுஎ.) இவ்வாறு தலைமகளின் வாயில் ஊறும் நீருக்குக் கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தினின்றும் ஊறும் சாற்றினை உவமைகாட்டிய சிறப்பால், அக்கால மக்கள், இப்பாட்டைப் பாடிய புலவரின் இயற்பெயரை மறந்து காலெறி கடிகையார் ” என அவ்வுவமையினையே அவருக்குப் பெயராக வைத்துப் பாராட்டுவாராயினர்.