பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. குப்பைக் கோழியார்

பெண்மைக்குரிய குணங்களால் கிறைந்த பெண் ணுெருத்தி, பெற்ருேரும் உற்ருேரும் அறியாமல் தக்கான் ஒர் ஆண்மகனேடு காதலொழுக்கம் மேற்கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திருந்தாள். அவள் காதல்வாழ்விற்கு ஒரு தடை வந்துசேர்ந்தது; மகள் மணப்பருவம் எய்திய மங்கையாயது அறிந்த தாய், அவள், இனியும் விரும்பி யாங்கு எங்கும் செல்லாவாறு இற்செறித்துவிட்டாள். இதல்ை, தான்் விரும்பிய அவ் ஆண்மகனேடு பண்டே போல், பழகுதல் தலைவிக்கு இயலாதாயிற்று ; ஆனால், அவன்பால் அவள் கொண்டுள்ள காதலோ பெரிது; அவனேக் காணுது ஒருபோது வாழ்தலும் அவளால் இய லாது; இப்போது அவனேக் காணமாட்டா நிலைவந்துற்றது ; அதல்ை உண்டான அவள் காதல்நோய் அவளைப் பெரிதும் வருத்துவதாயிற்று; காதல்நோய் பிறர்க்குணர்த்தலாம் பெற்றியுடையதன்று ; ஆகவே, அந்நோயைப் புறத்தார்க் குப் புலனுகா வண்ணம் உள்ளடக்கியே வந்தாள்; அதனல் அது அவள் உள்ளுறுப்புக்களை அழிக்கத் தொடங்கி விட்டது; எலும்புகளேயும் உருக்கத் தொடங்கி விட்டது; காதல்நோய் பெருகிய காலத்தும், தம் காதலைப் பிறர் உணருமாறு செய்து தலைவன்பால் தாமே சேர்வதைப் பெண்மையுணர்ச்சி தடைசெய்யும். *

'உடம்பும் உயிரும் வாடியக் காலும்

என்னுற் றனகொல் இவையெனின் அல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை’

- - - - - (தொல். பொருள். க.) என்பர் தொல்காப்பியனரும். ஆகவே, தலைமகன் உறையும் இடம் அடைந்து இன்புறுதல் அவளுக்கு அரிதாயிற்று; அவள் செயலற்றவளாளுள்.

இவள் கிலே இஃதெனின், அவனுவது, ஈண்டு வந்து இவள்துயர் போக்கும் ஆற்றல் உடையனே என்றால்,