பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைக் கோழியார் 5 §

இல்ல; அத்துணை எளிதில் அவன் ஈண்டுவால் இயலாது ; ஆகவே அவனும் செயலற்றவனுயினன்.

இங்கிலையில் இருவர் துயரையும் போக்கித் துணேபுரி

வாள் தலைமகள் தோழி ஒருத்தியே; இருவர்க்கும் இடை யில் நிலவும் உறவு முறையினைப் பெற்ருேர்க்கும் பிறர்க்கும் உர்ைத்தி, மனத்திற்கு ஆவனசெய்தல் அவள் ஒருத்தி யினலேயே இயலும்; ஆனால், அவள் அதை மேற் கொண்டாள் அல்லள்; தன் கிலேயினைப் பெற்ருேர்க்கு உணர்த்தி, மணத்திற்கு ஆவனபுரிந்து அறத்தொடு கிற்கு மாறு தோழியை வேண்டத் தலைவி விரும்புகிருள். ' என் கிலேயினைத் தாய்க்கு அறிவிப்பாயாக’ என வெளிப்படக் கூறல் அவள் பெண்மைக்குச் சால்பன்று; தன் பெண் மையும் கெடாவாறு, தன் எண்ணமும் நிறைவேறுமாறு தன் கருத்தை வெளியிட விரும்பிள்ை; தான்் கூறுவன வற்றைக் கேட்கும் அளவில் தோழி வந்து கிற்கும் காலம் நோக்கி, எங்கோ நோக்கிக் கூறுவாளாயினுள்.

蘇。 அவர் பால் நான்கொண்டுள்ள காதலோ பெரிது; ஆனல், அவரைக் காண இயலாவிலை இப்போது வர்துற் றது; அதனல் உண்டாய நோய் என் உடலையும் அழிக்கத் தொடங்கிவிட்டது; என் உடலே அழிவதாயினும், அவ ரைச் சென்று அடைதல் என்னல் இயலாது; என்பால் வந்து என்துயர் துடைப்பதும் அவரால் இயலாது; இங் நிலையில் என்னேப்பற்றி கலியும் இந்நோய், தன் முழு ஆற்றலையும் காட்டி என்னே வருத்திவிட்டு, மேலும் அழிக்க ஒன்று இல்லாமையால், அழிக்கும் தன் ஆற்றல் இழந்து தான்ே அழிய வேண்டுமேயன்றி, இடையிட்டு அதை அழிப்பார் எவரும் இலரே! அந்தோ !! என் செய்வேன்!” என்று கூறினுள். -

தலைவி அவ்வாறு கூறி வருந்துவது கேட்ட தோழி, 'தலைவி, இவ்வாறு கூறுவது என் பொருட்டே ; இவள் நிலையை இவள் பெற்ருேர்க்கு உணர்த்தி, இவள் துயர் தீர்க்குமாறு என்னைப் பணிப்பதற்கே இவள் இவ்வாறு