பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உவமையாற் பெயர்பெற்ருேர்

கூறுகிருள்; ஆகவே, இனி அறத்தொடு நிற்பதே என் கடனம் எனத் துணிந்தாள்.

இந்த அழகிய காட்சியை இப் புலவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்: --

' கண்தா வந்த காம ஒள் எரி,

என்பு:உற கலியினும் அவரொடு பேணிச் சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே ; வந்து அஞர் கள்ைதலே அவர் ஆற்றலரே ; உய்த்தனர் விடாஅர்; பிரித்து இடைகளையார் ; குப்பைக் கோழித் தனிப்போர் போல - விளிவாங்கு விளியினல்லது - - களேவோர் இலை யான் உற்ற நோயே..” (குறுங். உ0டு)

ஒருவைேடு ஒருத்தி கொள்ளும் தொடர்பிற்கு முதற் காரணமாயது கண் ; கண், அவனே முதலிற் காண்பதின லேயே அவன் உறவு உண்டாகும்; ஆதலின், ஒரு பெண்ணின் காதலுக்கு முதற்காரணமாயது கண்ணே ஆதலின், காதல் நோயைக் கண் தரவந்த காமம் என்றும் காதல்நோய், நோய் கண்டார் உள்ளுறுப்புக்களையும் உடலையும் எரியிட்ட இழுதென உருக்கி அழிக்குமாதலின், அக்காதலைக் காம ஒள்எரி என்றும், புலவர் இப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். -

தலைமகளின் காமநோய் களைவார் எவரும் இன்றி விடப்பட்ட கிலேயினை விளக்க, புலவர் அழகிய ஒர் உவமையினே எடுத்து ஆண்டுள்ளார்.

தமிழகத்தில், மக்கள் பண்டு மேற்கொண்ட விளே பாட்டுக்களுள், கோழிச்சண்டையும் ஒன்று. சண்டைக் கென்றே மக்கள் கோழிகளை வளர்ப்பர்; ஊரில் விழாப் போன்ற மகிழ்ச்சி மிக்க நாட்களில், கோழிகளைப் போரிட விட்டுப் பெருங்கூட்டமாகக் கூடிகின்று கண்டு களிப்பர்; போரில் எங்கள் சேரியைச் சேர்ந்த கோழியே வெல்லும்,