பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கூவன்மைந்தன்

தலைமகன் கல்வி, பொருள், காவல், புகழ் இவற்றுள் ஒன்று குறித்துப் பிரிந்து வேற்றுநாடு சென்றுள்ளான். அதனல், தலைமகள் பெருந்துன்புறலாயினள்; அவள் துயர், அளந்தறியாப் பெருந்துயராய்ப் பெருகித் தன் புறுத்தலாயின; துன்பத்தால் துயில்கொள்வதையும் மறந்தாள். அவள் அவ்வாறு துயருறுதற்காம் காரணம், 'பிரியேன்” என்றுகூறி மணந்த தலைவர் பிரிந்துவிட் டனரே இருந்து இன்பம் துய்க்க வேண்டிய இளமைக் காலம் கொன்னேகழியப் பிரிந்து சென்றுவிட்டனரே ! பிரிந்து தனித்திருந்து வாழ்ந்தறியா யான், எவ்வாறு இத் தனிமையைத் தாங்கி வாழ்வேன்?’ என அவள் துயர் கருதிப்பிறந்தகன்று இல்லறத்தின் பண்பும் பயனும், அன்பும் அறனுமாம் என்றும், அவ்வன்பும் அறனும் ஆற்றவும் பொருள்படைத்தார்க்கே வாய்க்கும் என்றும் அறிந்த அறிவுடையாள் ஆதலின், அவள் தனித்துறையும் தன் துயர் கண்டு வருந்திலள்; அவள் தன் துயர் காணுத் தகைசால் பூங்கொடியாவள் ; ஆதலின் பிரிந்துவிட்டனரே என்று வருங்கிலள். *

அவள் வருந்திய வருத்தமெல்லாம், சென்றவர் ஏதம் எதுவுமின்றி இனிது வந்து சேர்தல் வேண்டுமே என்ற எண்ணத்தால்தான்் ; அவள் அவ்வாறு வருந்துவதால், தலைவன் ஆண்மையில் ஆற்றலில் அவள் குறைகாணு கின்ருள் என்று ஆகாது; கல்லினும் வலியன் தன் கணவன்; அவன் ஆண்மையும், ஆற்றலும் உடையன் என்பதை அவள் உணர்வாள்; எனினும், அவன் சென்ற வழியின் சிலை, அவளே அஞ்சச் செய்கிறது; அவன் சென்ற வழி, கண்மூடிச் சென்ருலும் கருதிய இடத்திற் கொண்டு சேர்க்கும் நேர்வழியன் று. நாம் வந்தவழி இதுவோ ? அதுவோ? நாம் செல்ல வேண்டியவழி இதுவா? அதுவா? என்று எவரும் மயங்குதற்காம், ஒன்றேபோல் ஒன்று காணப்பெறும் கவர்த்த வழிகள் பலவற்றை இடை