பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூவன்மைங்தன் -59

யிடையே உடையது அவன் சென்றவழி; அதனல், சென்றவர், சென்று சேரவேண்டிய இடத்திற்குச் செல்ல மாட்டாமல் இடைவழியிலேயே இன்னல் பல அடைதலும் கூடும்; அன்றிச் சென்று மீண்டுவருங்கால் வழிதெரி யாது மயங்கி, வேறுவழியிற் புகுந்து கிலேதடுமாறி அலை தலும் கூடும் என்று எண்ணினுள் : அச்சம் அவள் உள்ளத்தே குடிபுகுந்து கொண்டது; உறங்க மறுத்து விட்டன அவள் கண்கள்.

'கின் கணவர், வழிதடுமாறுமளவு பழகி அறியாதவ ான்று ; ஆதலின் வழிமயக்கம் அவருக்கு உண்டாகாது ; நேரியவழி அறிந்து செல்வர் ஆதலின் கவலற்க என்று யாரோ கூறுவதுபோன்ற உணர்ச்சியொன்று உண்டா யிற்று; ஒருவாறு கவலையும் சிறிதே நீங்கிற்று; ஆனால் அடுத்தகணமே வழிமயக்கம் அவருக் குண்டாகாது என்ரு அலும் வழிஏதம் எதுவும் இன்றி அவர்வந்து சேரவேண் டுமே! அவர் சென்றவழி ஏதமில்லா இனிய வழியன்றே ! எங்கும், எந்த நேரத்திலும் ஏதம் பல உண்டாகுமே 1 அவ் வழிவாழ் ஆறலைகள்வரிற் பிழைத்து அவ் வழிவங் தார் அரியர் என்பரே! அதுவேயுமன்றிக் களிறும் கடுவா யும் போன்ற கொடுவிலங்குகளின் வாழ்விடமன்ருே அவர் சென்றவழி அவற்றின் கொடுமைகளினின்றும் பிழைத்து வருதல்வேண்டுமே என்று எண்ணினுள்; அவற்ருல் அவர் துயருறுவதுபோன்ற காட்சி அவள் மனக்கண்முன் தோன்றி மறைந்தது; அகன்ற அச்சம், மீண்டும் அவளே வந்தடைந்தது; அதல்ை அவள் நோய் முன்னினும் பெருகிற்று.

மீண்டும் ஒரு தெளிவு. நம் தலைவர் அவற்ருல் அழி வுறும் அத்துணை எளியால்லர்; எதிர்த்தார் எவரையும் எளிதில் அழிக்கவல்ல ஈடிலா ஆற்றலுடையவராவர்; ஆதலின், அவை அவரை ஒன்றும் செய்யா , அவற்ருல் இவர்க்கு ஏதம் எதுவும் வந்துருது என்ற எண்ணம் அவள் உள்ளத்தின் ஒருபால் உதித்தது; உள்ளம் ஒரு வாறு ஆறுதல் கொண்டது; ஆனால், அவர் எத்துணை