பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உவமையாற் பெயர்பெற்ருேர்

ஆற்றல் உடையரே ஆயினும், அவர் விரைவில் வந்துசேர் தல் இயலாதே; அவர், நனிசேய நாட்டிற்கன்ருே சென் மறுள்ளார் சென்றுள்ள நீண்ட பெரிய வழியினேக் கடந்து எப்போது வந்து சேர்வாரோ அதுகாறும் எவ்வாறு ஆற்றியிருப்பேன்’ என்று எண்ணினுள்; அச்சம், மீண்டும் அவள் உள்ளத்தை ஆட்சிசெயத் தொடங்கிவிட்டது. 'நாம் செல்லும் வழியின் இயல்பு இது; இதை அவள் அறிவாள்; அவ்வழியில் நாம் சென்றால் அவள் பொருள் என்று உணராது சென்றுவிட்டனரே! அவர் உள்ளங் தான்் எத்துணைக் கொடுமை உடையது' என்று வருங் திள்ை; அவள் உள்ளம் நோயின் உருவேயாகி உறுதுயர் பெறுவதாயிற்று; அவள் கண்களும் உறக்கம் ஒழிந்து அன்புறலாயின.

உறக்கம் இன்றி உறுதுயர் உறும் தலைமகளின் நிலை யினே உணருகிருள் தோழி. அந்தோ! துயர்க்கொடுமை தாழாது உடல் உருகி மெலியும் இவள் இறுதியில் இறந்து படுவளோ அந்தோ! இதற்கு என் செய்வேன்? வேற் அறார் சென்ற தலைவர் எப்போது வருவார் எப்போது இவள் துயர் நீங்கும் அவர் வரும்வரை அழிந்துபோகா வண்ணம் இவளை எவ்வாறு காக்கவல்லேன்' என்று எண்ணி எண்ணி அவளும் துயர் உறுவாளாயினள். அவள் துயர், கலைமகள் துயரினும் கொடிதாயிற்று.

தோழியின் இத்துயர்நிலையினைத் தலைவி உணர்கிருள். 'பிறர் துயர் காணப் பார்த்து இருத்தல் பண்புடையார்க்கு அழகன்று என்பரே ! என் கண்முன்னரே, இதோ, இவள் என் உயிர்த்தோழி துயர் உறுகின்ருள்; அதுவும் அவள் துயர் உறுவதற்குக் காரணமும் யான் அன்ருே ' இத்தகையாள் துயர் போக்குவதன்ருே என் கடன் ? ஆனல், அங்தோ , யான் என் செய்வேன் என் துயரையே என்னல் போக்கிக்கொள்ள முடியவில்லையே; இந் நிலை யில், இவள் துயரை எவ்வாறு போக்கவல்லேன்? அவர் சென்ற வழியின்நிலை எண்ணி வருந்தும் என் நோயினும்,