பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூவன்மைந்தன் 6型

தோழியின் நோயன்ருே பெரிதாக உளது? நான் என் துயரை ஒருவாறு ஆற்றினும் ஆற்றுவன்; ஆனால் தோழி யின் துயர்நிலைகண்டு தோன்றிய இந்நோயை எவ்வாறு ஆற்ற வல்லேன்சி கோழியின் துயர்நிலைகண்டு உளம் பொருது அழுவதன்றி அதைத் துடைக்கும் ஆற்றல் இல்லா என்னே ப்போல் செயலற்றுத் துயர் உறுவாரும் உலகில் உளரோ '

நல்ல ஒரு பசு; கிணற்றிலே விழுந்துவிட்டது; அதைக் கண்டான் ஒர் ஆண்மகன்; அவனே அருள் கிரம்பிய உள்ளம் படைத்த உயர்ந்தோர் தோன்றிய குடி யிலே பிறந்தவன்; அதனுல் அதைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இயல்பாக உண்டாயிற்று; ஆனல், பசுவின் துயரினத் தன்னல் தனித்துப் போக்க முடியாது என்பதை உணர்ந்தான்்; யாரேனும் சிலரைத் துணைக்கு அழைத்தல்வேண்டும்; ஆனால் அதை அவனுல் செய்ய முடியவில்லை; அந்த இடத்தில் இருந்தவாறே " அந்தோ அங்கோ !! பசு ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது; அவலம்! அவலம்! ஒடிவாருங்கள்; ஒடி வாருங்கள்,” என்று உரக்கக் குரலிட்டால் எவரேனும் ஒடிவருவர்; அதை அவனுல் செய்யமுடியாது; காரணம், அவனேர் ஊமன் ; உள்ளக்கருத்தை உரையால் உண்ர்த் தல் அவனுல் இயலாது; இருந்த இடத்தில் இருந்தவாறே எவரையும் கூவி அழைக்க முடியாது என்றால், கண்ணிற். கண்டார் எவரிடத்திலாவது ஒடிச்சென்று, நேர்ந்த நிகழ்ச் சிகளை எழுத்தாலோ அன்றி வேறு வகையாலோ அவர்க்கு அறிவித்து அவரை அழைத்துவந்து பசுவின் துயர் போக் கலாம் என்றால், அதையும் அப்போது செய்தல் இயலாது; காரணம், அது நிகழ்ந்த நேரம், இராக்காலம்; எவரும் வெளியில் வழங்கார்; வழங்குவார் உளராயினும் அவர் வழங்குவதை அறிந்துகொள்ள முடியா இருட்காலம்; ஆகவே, எங்கேனும் ஒடி, எவரையேனும் கண்டு, நடந்த விதத்தை அவர்க்கு எவ்வாருயிலும் உணர்த்தி அழைத்து. வருவதும் அவல்ை இயலாது.