பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 உவமையாற் பெயர்பெற்ருேர்

இவ்வாறு, தன்னலும் போக்க முடியாது; அதைப் போக்கவல்லாரைக் கண்டு உணர்த்தி அவர் துணைபெற்றுப் போக்கவும் இயலாது; அங்கிலையில் பசு கிணற்றில் வீழ்ந்து துயர் உறுவதைப் பார்த்துப் பார்த்துத் தான்ும் துயர். உறுவதல்லது போக்க இயலாது வருந்தும் உயர்திணைப் பிறந்த ஊமனப்போல், தோழிபடும் துயரைப் பார்த்துத் துன்புறுவதல்லது அதைப் போக்கவல்லேன் அல்லேன் ; அந்தோ என் துயரின் கொடுமைதான்் என்னே !’ என்று வருந்துவாளாயினள்.

' கவலே யாத்த வவல நீளிடைச்

சென்ருேர் கொடுமை எற்றித், துஞ்சா ாோயினும் நோயாகின்றே கூவல் குரால்ஆன் படுதுயர் இராவில் கண்ட உயர்தினை ஊமன் போலத் துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே.”

- - (குறுக் உஉச) இவ்வாறு தனித்துவாழும் தன் துயர்நிலை எண்ணி வருந்துவதினும், தன் துயர்நிலை கண்டு வருத்தும் தோழி யின் துயர்கில்ே கண்டே பெரிதும் வருந்தினுள் என்று கூறித் தமிழ்நாட்டு மகளிர்கம், கம் தியர்காணுத் தகை மையினைத் தமிழுலகிற்கு உணர்த்திய புலவர், தோழியின் துயர்கிலே கண்டவழி அதைப் போக்கக் கடமைப்பட் டிருந்தும், போக்கவல்ல ஆற்றலின்றிக் கண்டு வருந்தும் தலைமகளின் கிலேக்கு, பசு ஒன்று கிணற்றில் வீழ்ந்து துன் புற்றக்கால், அதைப் போக்கக் கடமைப்பட்ட உயர்குடிப் பிறப்பும் உள்ளமும் உடையான், தன் உறுப்புநலக் குறை வால், அதைப் போக்கவல்ல ஆற்றலும் வகையும் காணுது, அதன் துயர்நிலையினைக் கண்டு கண்டு வருந்தும் ஊமன் ஒருவன் கிலேயினை உவமித்த, உயர் பேரிலக்கியப் பண் புடைமையால் கூவன் மைந்தன் என்ற புகழ்நிறைந்த பெயர் பெற்றுத் திகழ்வார்ாயினர்.