பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 உவமையாற் பெயர்பெற்ருேர்

என்று புலவர்கள், வியந்து பாராட்டினர். இவ்விருவர் கொண்டாட்பே நட்பாம்; உயரிய நட்பிற்கு ஒருவரை யொருவர் அறிந்து பழக வேண்டுவதில்லை; இருவர் உள்ள மும் ஒன்றுபட்டால் அதுவேபோதும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்் நட்பாங் கிழமை தரும் ” (கிருக்குறள் எஅடு)

உள்ளம் ஒன்றுபடுவதே உயரிய ஈட்டாம்;

' கெஞ்சத்து அகம் நக கட்பது நட்பு (திருக்குறள். எஅடு-சு)

உள்ளம் ஒன்றுபட்டார்க்கு உரையும் செயலும் ஒன்று படும்.

' உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்.” (பாரதியார்.)

தமிழ்நாட்டுக் கணவனும் மனேவியும் இத்தகைய உள்ள ஒற்றுமை கொண்டு வாழ்ந்தனர்; அக்காலப் புலவர் கள், அவர்கள் அவ்வாறு வாழவேண்டும் என்று விரும்பி னர்; அத்தகைய உள்ள ஒற்றுமை உடையார்தம் இருவர்க் கிடையே, புறவேற்றுமை எவ்வளவு இருப்பினும், அவற் றைக்கண்டு கவலையுருர் : அப் புறவேற்றுமைகள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்ப்பினும், அவர்கள் உள்ளங்கள் ஒன்று. படுவதைத் தடை செய்தல் இயலாது; அவை ஒன்றுப்ட்டே தீரும்; ஒன்றுபட்ட உள்ளங்களைப் பிரித்தலும், அப்புற வேற்றுமைகளால் இயலாது. தமிழ்நாட்டுக் காதலர்தம் இவ்வுள்ள இயல்பைக் காதலன் ஒருவன் தான்ே உணர்த் தும் முறையில், ஒரு புலவர் உணர்த்தியுள்ளார். .. ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆண்மகன் ஒருவன், ஒருநாள் ஒரிடத்தில் தன்னைப்போன்றே ஒப்பாரும், மிக் காரும் இல்லாப் பெண்மகள் ஒருத்தியைக் கண்டான்; அவளும், அவனேக் கண்டாள்; அவளே அவன் அதற்கு முன் அறியான் அவளும் அவனே அதற்குமுன் அறியாள்; அவள் தாய் பார் என்பது அவனுக்குத் தெரியாது; அவன்