பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 உவமையாற் பெயர்பெற்ருேர்

உள்ளம் ஒன்றுபடுவதே உயரிய காதலருக்கு உரிய பண்பாம் என்றுணர்த்த வந்த புலவர், அவ்வுள்ளங்கள் எவ் வாறு ஒன்றுபடுதல் வேண்டும் என்பதை உணர்த்த செம்பு லப்பெயல்நீர் கலந்த கலவையாம் அழகிய உவமையினே மேற் கொண்டு, அக் காரணத்தினலேயே செம்புலப் பெயல்நீரார்” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுத் திகழ்ந்துள்ளார்; அவர்க்கு அப்பெயர் வாங்கித்தந்த அவ்வுவமையினே துணுகி நோக்கிலைன்றி, அவர் உணர்த்தும் காதலர்தம் உள்ள ஒற்றுமையின் இயல்பும், அவர்க்கு அப் பெயரிட்டு வழங் கும் பெருமையின் சிறப்பும் விளங்கா ஆதலின், அவ்வுவமை யினைச் சிறிது நோக்குவாம்.

ரு பொருள்கள் சேர்ந்து நின்றன என்றால், ஒரு பொருளோடு மற்றொரு பொருள் வந்து சேர்தல் வேண்டும்; அவ்வாறு சேர்ந்து கின்ற இரு பொருள்களுள் ஒன்று, மற். ருென்றைவிடச் சிறந்ததாயின், அச் சிறந்ததன் இயல் பையே ஏனேயது பெறும் ; சேர்ந்து கின்ற இரு பெர்ருள் களுள் சேர வரும்பொருள், அது எப்பொருளோடு சேர வருகிறதோ அப்பொருளினும் சிறிது தாழ்வுடையதாகவே இருக்கும் ; அதனல், சோவரும் பொருள், தன் இயல்பு அழிந்து அது சேர்ந்து கிற்கும் பொருளின் இயல்பைப் பெற்றுவிடுமேயன்றி, அப்பொருளின் இயல்பை அழித்து அதற்குத் தன் இயல்பை ஏற்றிவிடும் ஆற்றலுடைய தாகாது. பொன்மலையைச் சேர்ந்த காகமும் பொன் கிறம் பெறும்.”

ஊரங் கனநீர் உரவுநீர்ச் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்.” ' ஒண்கதிர் வாண்மதியம் சேர்தலால் ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழப்பஉேம்.”

(நாலடியார். கஎடு-சு.)

எனப் புலவர்கள் கூறுவனவும் காண்க. இவ்வாறு சேர்ந்து நிற்கும் பொருள்களுள், சோவரும் பொருள்களினும் சேர்த்துக்கொள்ளும் பொருள்களே சிறந்து விளங்குவதி