பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்புலப் பெயனிரார் 67

குலேயே, ஒருங்கு சேர்ந்து இயங்கும் பொருள்களிடையே மேற்கொள்ளப்படும் ஒடு என்ற உருபினைச் சேரவரும் பொருளின் பின் அமைக்காது, சேர்த்துக் கொள்ளும் பொருளின் பின்னர் அமைப்பதை இலக்கண ஆசிரியர்கள் மேற்கொள்வாராயினர்.

  • பாலோடு அளாயநீர் பாலாகும்.” (நாலடியார். கன எ)

பால் நீர் இரண்டனுள், பால் சிறப்புடையது ; நீர் அத் துணைச் சிறப்பில்லாதது ; அது, பாலோடு சேர்ந்தால், அதுவும் பாலாய்ச் சிறப்புடையதாகும். ஆகவே சிறப் புடைய பால் என்பதோடு, ஒடு கொடுத்து வழங்கின்ர்.

ஒருவின்ை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே.”

(தொல், சொல் வேற்றுமை மயங்: அ)

என்பது விதி. இந்த கியதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

கிலத்தியல்பால் ர்ேதிரிங் கற்ருகும்.” (கிருக்குறள் : சடுஉ) என்ற வள்ளுவர் காட்டிய உவமை, செம்புலப் பெயர் நீர் போல்’ என்ற இந்த உவமையினேயும் அந்த முறைமை யின் அடிப்படையில் பொருள் காணுதல் கூடாது ; இந்த உவமையின் பொருளாய் விளங்கும் உள்ளங்களுக்கு உரிய ராய அவனும் அவளும் ஒருவரின் ஒருவர் உயர்ந்தவால்லர்; ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழவேண்டிய கிலையினை உடையாால்லர் ; உருவானும் திருவானும் ஒத்த பண்பின ராவர். A.

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப.’ (தொல். களவு : உ)

என்பர் தொல்காப்பியனரும். அத்தகையார் இருவர் உள் ளமும் இணைந்தன ; ஒருவர் உள்ளம் கின்ருங்கு கிற்க, ஏனையோர் உள்ளமே உருகி, அவர் உள்ளத்தோடு கலர் தது என்று கூறுதல் பொருந்தாது ; அதுதான்் உண்மை பெனின், அஃது ஒருதலைக் காமமாம் கைக்கிளேயாம் ;