பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 உவமையாற் பெயர்பெற்ருேர் -

அன்பின் ஐந்திணையின் பாற் படாது ; அவன் உள்ளம் உருகி, அவள் உள்ளத்தே புகுந்தது, அவள் உள்ளம்உருகி அவன் உள்ளத்தே புகுந்தது; அவன் தன் இயல்பு கெட்டு அவள் இயல்பான்ை ; அவளும் தன் இயல்பு கெட்டு அவன் இயல்பாள்ை; முழு ஆண்மைத்தன்மை அவனிடம் குடி கொள்ளவில்லை; முழுப் பெண்மைத்தன்மையும் அவளிடம் இல்லை ; ஆண்மையில் சிறிது குறைந்தான்் அவன் ; பெண் மையிற் சிறிது குறைந்தாள் அவள் ; ஆண்மையும் உரனும் அவன்பால் கில்லாது ஒடின நானும் மடலும் இவள்பால் கில்லாது மறைந்தன ; இவ்வாறு இருவரும் தம்தம் இயல் பிற் குறைந்து, ஏனேயோர் இயல்பை ஏற்று, இரண்டறக் கலப்பதே உண்மைக் காதலுக்கு இயல்பாம்; அங்கிலையில் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவர் என்ற நிலை இராது ; அவ்வெண்ணம் இருத்தலும் கூடாது.

' இருவருமே ஒருவர் எனில் எவர் பெரியர் சிறியர் ’ எனக் கேட்கும் காதலன் ஒருவன் கூற்றைக் கூர்ந்து உணர்க. ஆண்டவன், ஆண் பெண் வடிவினன் என்ற உண்மை இதையே உறுதி செய்வதும் காண்க.

இயல்பால் ஒருவரின் ஒருவர் உயர்ந்தவரல்லர்; ஒத்த வரே என்று கொள்ளினும், எவர் உள்ளம் முதலில் நெகிழ்ந்து, ஏனையோர் உள்ளத்தில் புகுந்தது என்று கண்டு, அவ்வழியாக உயர்வு தாழ்வு கொள்ளலாம் என்று கருதினுல் அதுவும் இயலாது ; கூடாது.

' அண்ணலும் நோக்கினன்; அவளும் நோக்கினுள்.”

(கம்ப. மிதிலைக் : கட்டு) என்பதைப் போல இருவரும் ஒரே நேரத்தில் காண்பர் : இருவர் உள்ளமும் ஒரே நோக்கில் நெகிழும்; ஒருவர் உள் ளத்தில் ஒருவர் உள்ளம் மாறிக் குடிபுகுதலும் ஒரே நேரத்தில் நிகழும் ; ஆதலின், எவர் முன் அனந்தார் ? எவர் பின் அணைந்தார்' என்று கூறுதலும் இயலாது.

'சிவகாமி யான் உனது சிதம்பானே என்னச்

செப்புமுனம் இருவரும் அற்று ஒருருவமானர்