பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்புலப் பெயனிாார் 69

எவர்தாம்முன் அனந்தனர்என்று இதுகாறும் அறியோம் இருவரும் ஒன் முயினரென் றேஅறையும் சுருதி.” என்ற சிவகாமி சரிதச்செய்யுளைக் (ச.அ) காண்க.

ஆதலின், காதலர் இருவர் உள்ளம் கலந்த முறை யினே விளக்கவந்த செம்புலப் பெயல்நீர்' என்ற உவமை யில்வரும் புலம், நீர் என்ற இரண்டையும், கிலத்தோடு நீர் வந்த சேர்ந்தது; அதனல், நீர், கிறமும் குணமும் அற்ற தன் இயல்புகெட்டு, சிலத்தின் இயல்பாம் செந்நிறத்தைப் பெற் றது எனப் பொருள்கொள்ளுதல் தவரும் ; கிலத்தோடு நீர் வந்துசேர வில்லை; நீரோடும் கிலம்வந்து சோவில்லை ; கிலத் தின் இயல்பை நீர் பெற்று விடவில்லை ; நீரின் இயல்பை கிலமும் பெற்று விடவில்லை : இரண்டுமே ஒன்று கலந்தன; இரண்டுமே தம் இயல்பு இழந்தன ; அங்கே தனி நீரும் இல்லை; தனிப்புலமும் இல்லை; நீரின் ஒடுந்தன்மையும் இல்லை; கிலத்தின் திண்மைத்தன்மையும் இல்லை; நீரும் கிலமும் மறைய, சேறு என்ற புதுப்பொருள் தோன்றிற்று; அங்கே ரிேன்தன்மையும் உண்டு; கிலத்தின்தன்மையும் உண்டு ; இருபொருளும் அவற்றின் இரு இயல்புகளும் இரண்டறக் கலந்து காட்சியளிக்கும்.

இவ்வாறு, கிலமும் நீரும் தத்தமக்குரிய பண்புகளைத் தனித்தனியே பெற்றிராது ; அவற்றை ஒர் அளவு இழந்து, தம் பண்புகள் பிரிக்க ஒண்ணுவாறு கலந்து கிற்கப் புதிய தோர் உருவினைப் பெற்ருற்போல், தனி ஆண் உள்ளமும், தனிப் பெண் உள்ளமும் வேறுபட்ட இருபொருள் என்ற இயல்பினே இழந்து, பின்னர்ப் பிரித்துக்கான இயலாவாறு இரண்டறக்கலந்த புது உருவினேப் பெற்றுவிட்டன என்று கூறி உண்மைக் காதலர்தம் உள்ளத்தன்மையை உள்ள வாறு உணர்த்தவல்ல பொருள்செறிந்த சிறந்த உவமை யினைக் கண்டார்க்கு, அவ்வுவமையால் செம்புலப் பெய னிார்” எனப் பெயரிட்டுப் பெருமைப்படுத்தியது தமி ழுலகம். எத்துணைப் பொருத்தம் ! எத்துணைச்சிறப்பு !!