பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க9. தனிமகனுர்

பழங்காலத் தமிழ்ப் பேரூர்கள், பண்பாட்டிற் சிறக் தன ; கோட்டையும் வாயிலும் கோயிலும் கொண்டு குடி வாழ்வார்க்குப் பாதுகாப்பளிப்பன ; நெல்லும் பொன்னும் கிறைந்து, நெடுநிலத்துள்ளாரையும் தம்பால் ஈர்க்கும் நீர்மைய ஆடரங்குகளும் அறங்கூர் அவைகளும் பெற்று, அழகும் அறமும் விளங்குவன ; பேரூர்கள் ஒவ்வொன் றையும் சூழ்ந்து, பகைவர் புகுவதற்கும் அஞ்சும் காவற். காடு அமைந்திருக்கும் ; அகத்தே நன்செய் கிலங்கள் செங் நெல் விளைந்து செழித்து விளங்கும்; பொய்கைகள், கழு நீர் மலர்ந்து கவின்பெறத் தோன்றும் ; வயல்களில் உழவர் கள் ஏர் பல கொண்டு தொழிலாற்றும் காட்சி, கண்கொ ளாக் காட்சியாகும்; ஊர்ப்புறத்தே பசுக்கள் கிரை கிரை யாக மேய்ந்து மகிழ்ந்து வாழும்; உலக மக்கள் எல்லாம் ஒருங்கே புகிலும் இடங்கொடுக்கும் பேரிடம் கொண்ட பெருவாயில்கள் பல, நகரைச்சூழ அமைந்து அணிதரும்.

ஊர்நடுவே அமைந்த மன்றங்களில், மகளிர் பலரும் கூடிக் குரவையும் துணங்கையும் ஆடி மகிழ்வர்; அறங் கூறும் அவைகளில், சான்ருேர் பலரும் சேர்ந்திருந்து நக ரில் அறனல்லன நிகழாவண்ணம் காத்து சிற்பர்; வேற்றார் களில் வாழ வழியின்றி வந்து சேர்ந்த சுற்றத்தையும் ஒம்பித் தாமும் இனிதுவாழும் செழுங்குடிச் செல்வர் பலர் - வாழ்ந்திருப்பர்; பேரூர்களில் உள்ள வீடுகள் தோறும், நெல்முதலாம் ஒன்பான்வகை உணவும் நிறைந்த கிடக்கும் குதிர்கள், குன்றுகள்போல் தோன்றிக் காட்சி தரும் ; நாளங்காடிகளின் நறுமணம், மக்கள் மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாம் ; விழாக்குறித்தும் வெற்றிகுறித்தும் எடுத்த கொடிகள், நகரின் எம்மருங்கும் கின்று அசைந்து அழகு கரும. -

தமிழ்நாட்டுப் பேரூர்கள், இவ்வாறு வளத்தால் வனப்புடையதாய், ஆடல் பாடல்களால் அழகுடையதாய், காவற்சிறப்பாற் கவினுடையதாய் விளங்குவது கண்ட புல