பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமகனர் 75

மின்னலையும் கண்டாள்; கணவன் வரக்கண்டிலள் ; ஒரிடத்தே அன்றி உலகம் முழுதும் பெய்த மழையையும் கண்டாள் ; இடித்துப் பெய்த மேகம் நீர் முற்றும் வற்றி வெண்ணிறம் பெற்றுத் தென்திசை நோக்கி ஒடி மறை வதையும் கண்டாள்; அங்கிலையிலும் அவன் வந்திலன்; ஒளிவிடும் மின்னலும், பெய்யும் மழையும், ஒலிக்கும் இடியும் அவர் சென்ற நாட்டிலும் நிகழ்ந்திருக்குமே; அவற்றைக் கண்டும் வந்திலரே என்று வருக்கிள்ை ; வாடினுள.

அவள், நானும் சிறையும் முதலாம் பெண்மைக் குணங்களால் கிறைந்தவள்தான்் ; ஆனல், தலைவன்பால் கொண்டுள்ள அவள் காதலும், அவள் காட்டிய நெறி பிறழா அவள் கற்பு வாழ்வும், அப் பெண்மைக்குணங்களி லும் சாலச் சிறப்புடையன என உணர்ந்தவள் ; உடலிற்கு இன்றியமையாதது உயிர் ; ஒருவர்க்கு உயிரினும் சிறந்த ஒரு பொருள் இல்லை என்ப; ஆனல், நானும் கிறையும் முதலாம் பெண்மைக்குணங்கள் உயிரினும் சிறந்தன வாகும.

' உயிரினும் சிறந்தன்று நானே. ’ (தொல், பொருள்: க.க.) என்பர் தொல்காப்பியர், நாணம் உயிர் இரண்டனுள் ஒன்றே பெறலாகும் ; ஒன்றை விரும்பின் ஒன்றை இழத்தல் வேண்டும் என்ற கிலே உண்டானல், உயர்ந்தோர் உயிரையே இழப்பர் ; நாணே இழக்க எண்ணுர்,

' நானல் உயிரைத் துறப்பர் : உயிர்ப்பொருட்டால்

நாண் துறவார் நாளுள் பவர்.” (திருக்குறள்: க0கள்) நாண்இல்லா வாழ்வு, உயிருடை வாழ்வாகாது ; அது, பிறர் இயக்க இயங்கும் பாவைவாழ்வு போலாம்.

'நாண் அகத் தில்லார் இயக்கம், மரப்பாவை

நாணுல் உயிர்மருட்டி யற்று. ” (திருக்குறள். கoஉ6). " தாயிற் சிறந்தன்று நாண். (திருக்கோவையார் : உ0ச)

என்றும்,