பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமகனர் 79

செம்பு சொரி பானையின் மின்னி, எவ்வாயும் தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி, தென்புல மருங்கில் சென்றும் ருங்கு நெஞ்சம் அவர்வயின் சென்றன, ஈண்டுஒழிந்து உண்டல் அளித்து என் உடம்பே ; விறற் போர் வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத் கிருந்த தனிமகன் போன்றே. (நற் கடு கூ)

புலவர் கனிமகனர், பழங்கால அரசர், தம் பகைவர் காட்டைப் பாழாக்கும் கொடுமை, கற்பே பொற்புடைக் குணமாம் ; அதை எத்துணைக் கேடுறினும் காத்தல் தம் கடனும் என உணரும் சங்காலத் தமிழ்மகளிர் உள்ளம், செம்பால் பானே செய்து அதற்கு விளக்கம் தருதற்குக் கடைந்தெடுக்கும் தொழில் துணுக்கம் தெரிய வாழ்ந்த தமிழர் தம் நாகரிகச் சிறப்பு, கீழ்க்கடலில் படிந்து நீருண்டு. மேலைத்திசை நோக்கி எழுந்து பரந்து மின்னி இடித்துப் பெய்து பின்னர் தென்திசை நோக்கிப் பாயும் புயலின் தன்மை ஆகிய இவை எல்லாம், தம் ஒரு பாட்டி லேயே அமையப் பாடிய சிறப்பு பாராட்டி மகிழ்தற் குரியதாம். உவமையாற் பெயர்பெற்ற பெருமையுடைய இப்புலவர், இந்த ஒரு பாட்டிலேயே, மின்னலுக்குக் கம்மியர் செம்புசொரி பானே, தலைவியின் நெஞ்சம் தலைவன்பால் சென்றமைக்குக் கீழ்க்கடலில் எழுந்த மேகம் தென்புலமருங்கிற் சென்று சேர்ந்தமை, பெண் மைக் குணமெல்லாம் இழந்து தனித்துத் துயருறும் தலைவி யின் கிலேக்கு வாழ்வோர் போகிய பேரூர்ப்பாழ் காத்திருந்த தனிமகனின் துயர்நிலை ஆகிய அழகிய மூன்று உவமைகளை ஆண்ட அவர் புலமைநலம் புகழ்ந்து போற்றுதற் குரியதாம். -