பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. தேய்புரிப் பழங்கயிற்றினுர்

. மக்கள் உள்ளம் ஆசை உடையது; ஆசை, மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு அதன் உயர்விற்கு உறுதுணை புரிவது; ஆசையற்ற ஒருவன் வாழ்வில் வளர்ச்சியை வனப்பைக் காணல் இயலாது ; ஆனால், அவ்வாசை அள விற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும் ; ஆசைக்கோர் அளவில்லை ” என்ற நிலையை அடைந்துவிடுதல் ஆகாது ; ஆசை அளவுமீறிச் செல்வதை ஒருவாறு ஏற்றுக்கொள்ளி இம், அது ஆகாத பொருள்மீது உண்டாதல் சிறிதும் கூடாது ; ஆசை நல்லனவற்றின்மீது செல்லும்வரை, அதை, நல்லது ; அனேவர்பாலும் இருக்கவேண்டுவது. என்று கருதிக்கொள்ளலாம் ; ஆணுல் அது தீய பொருள் கள் பால் செல்வதாயின், அதை, அங்கிலேயிலேயே அடக்க வும், அகற்றவும் வேண்டும். f

ஆனால், உலகத்தில் மிகச்சிலரே போதும் என்ற பொன்னை மனம் படைத்துப் புகழ் பெற்றவராவர்; உலக உயிர்கள் பலவும் அளவிற்குமீறிய ஆசையின் வடிவாகவே காணப்படுகின்றன ; அதைப்போலவே, நல்லபொருள்கள் பால் காட்டம் கொள்வதினும், தீயபொருள்கள் பால் தோன்றிய ஆசைக்கு அடிமையாவதையே உள்ளம் பெரி தும் விரும்புகிறது. நல்ல பொருள்கள்மேற் சென்ற ஆசை உடையார், காட்டில் அரியர்; தீயபொருள்கள்பால் ஆசை செல்வதையே பெரும்பாலோர் விரும்புவர்; இங்கில அத் தகைய உள்ளம் உடையார்க்கும், அவர்கள் வாழும் நாட் டிற்கும் கேடு பல விளைவிக்கும்; ஆதலின், உள்ளத்தை அது சென்றவழிச் செல்லவிடுதல் கூடாது ; அதை அடக்கி ஆளுதல் வேண்டும்; உள்ளம், ஆசைக்கு அடிமைப் படுதல் கூடாது; ஆசையை அது அடிமைகொள்ளுதல் வேண்டும்; ஆசைக்கு அடிமைப்பட்ட உள்ளம், உலக இன்பம் ஒரு சிறிதையும் உண்ணுது; ஆசையை அடிமை @ಹrರ್ಕ- உள்ளம், உலக இன்பம் அனைத்தையும் ஒருங்கே இயககும். - - - -