பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

49

நிற்கும் அதியமானுக்குப் புலியோடு போரிட்டு வென்ற பின்னரும் சினம் மாறா யானையையும்,

"வரிவயம் பொருத வயக்களிறுபோல
இன்னும் மாறாது சினனே" (புறம்: க00)

பகைவர் படை கண்டு பதுங்காது பாய்ந்து தாக்கும் போர்வீரர்க்கு, அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எழுந்து கடிக்கும் பாம்பையும்,

"எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளர்" (புறம்: அ௬)

பகைவர், அதியமான் படைகண்டு வலிமை மிக்க தற்காப்பு முறைகளை மேற்கொள்ளினும், அவரைத் தவறாது அழிக்கும் ஆற்றல் வாய்ந்த அதியமானுக்கு, வெண்கடுகுப் புகை எழுப்பித் தடுப்பினும், தவறாது வந்து உயிர்களைப் பற்றிச் செல்லும் எமனையும்,

"ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென
உறுமுறை மரபில் புறம் நின்றுய்க்கும்
கூற்றத் தனையை" (புறம்: ௬அ )

அழிக்கமுடியா ஆற்றலும், திண்மையும் வாய்ந்த அதியமானுக்கு நாள் ஒன்றிற்கு எட்டுத் தேர் செய்ய வல்ல தச்சன் ஒருவன், ஒரு திங்கள்காறும் செய்த ஒப்பற்ற திண்மை வாய்ந்த தேர் உருளையினயும்,

"வைகல் எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோன்."

(புறம்:அஎ)

)

தன்கீழ் வாழ் மக்களுக்கு எதிர்பாரா வகையில் இன்னல் நேர்ந்தால் தான் முன்னின்று காக்கும் பொகுட்டெழினிக்கும் பாரம் மிகுதியால், இடைவழியில் அச்சு முறிந்தவழி பயன்படுத்துதற்கென்றே அவ் வண்டியோடு கொண்டு செல்லும் சேம அச்சினையும்,

"சேமஅச்சன்ன இசைவிளங்கு கவிகை நெடியோய்!"

ஒள.-4 .