பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஒளவையார்

கிடைத்தற்கரிய பொருள்மீது நெஞ்சம் அதிக ஆசை கொள்வதற்குப் பெய்யும் மழைநீரைச் சுடப்படாத மட்கலத்தில் பிடிப்பார் செயலையும்,

"பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா 1வெள்ளம் நீந்தி அரிது அவாவுற்றனே நெஞ்சே!"

கணவன் பொருள்வயிற் பிரியத் தனித்திருக்கும் தலைவி, இரவில் துயில் இன்றித் துன்புறுதற்குப் போர்க்களத்தின் அண்மையில் வாழ்வார், போர் அச்சத்தால் இரவில் உறக்கமின்றி இன்னல் உறுவதையும்,

"கொன்முனை இரவூர் போல இலவாகுக நீ துஞ்சும் நாளே.'

ஒருவர் கூறிய கருத்தை அவ்வாறே ஏற்றுத் தழுவி, இசைவதற்குக் குட்டிக்குரங்கு தன் தாய்க்குரங்கை விடாது இறுகத் தழுவிக்கொள்வதையும்,

"மகவுடை மந்திபோல் அகனுறத் தழீஇக் கேட்குநர்"

தலைவன் பிரிந்த பின்னர்த் தனித்திருப்பின் வாழோம்; இறந்து படுவோம் எனக்கண்டு, அவன் சென்ற வழியே தானும் சென்று தலைவனை அடைய எண்ணும் தலைவியின் செயலுக்கு, நீர்அற்ற இடத்தில் கின்று வாழாது, நீருறையிடம் நோக்கிச் செல்லும் மீனின் செயலையும் உவமை கூறியுள்ளார்.

"அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு அவர் வழிநடைச் சேறல் வலித்திசின்" (11) ஒளவையார் காலத்து காட்டு நிலைபெரிய எழுத்துக்கள்: புலவர் எவரும் தாம் வாழுங் காலத்தில், தாம் வாழும் நாட்டின் நிலவளம் நீர்வளம், மக்கள் மேற்கொண்ட


1.வெள்ளம் ஆசை.