பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஔவையார்

51

தொழில்வளம், அவர்கள் நடாத்திய வாழ்க்கைமுறை, அன்று நிலவிய ஆட்சிநிலை, வாணிப வழிகள், செல்வச் இறப்பு ஆகியவற்றைக் குறிக்காமல் பாடல் புனையார். ஆதலின், இலக்கியங்கள் எழுந்த காலத்தின் நிலையைக் காட்டும் காலக் கண்ணாடி என்பர்; "தொலைத்தோற்றம் "தொலை நோக்கிபோன்ற தொலேநோக்கிகள் எல்லாம், இடத்தால் சேய்மையவாம் பொருள்களை மட்டுமே அண்மையில் கொணர்ந்து காட்டும் இயல்பின. ஆனால், இலக்கியத் தொலைநோக்கிகள், இடத்தால் சேய்மையான பொருள்களையே அல்லால் காலத்தால் சேய்மையான பொருள்களையும் தெளிவாகத் தெரிவிக்கும் இயல்பினவாம்; இஃது, எந்நாட்டு இலக்கியங்கட்கும் பொதுப்பண்பாம்; அத்தகைய தொலைநோக்கிகளுள், ஒளவையார் ஆக்கித் தந்த தொலைநோக்கியின் துணைகொண்டு நோக்கியவழி, நம் கண்ணிற்குப் புலனாக அவர் வாழ்ந்த காலத்து நாட்டுநிலைக் காட்சியே கீழே காட்டப்பெறுவது.

தனக்கு வேண்டும் உணவிற்குப் பிற நாடுகளின் துணையை நாடும் இன்றையத் தமிழகம் போன்றதன்று பழந் தமிழ்நாடு; செந்நெற் கதிர்கள் செழித்து வளரும் செந்தமிழ் நாட்டின் சிறப்பை ஒளவையார், அகங்குளிரக் கண்டு அழகாகப் பாராட்டியுள்ளார். அவர் காலத்துத் தமிழர்கள், உழவின் சிறப்பறிந்து அத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்ததோடு அமையாது, நல்வாழ்விற்குத் துணைபுரியும் வேறு பல தொழில்களையும் பயின்று மேற்கொண்டிருந்தனர். பொதுவாக ஒரு நாட்டின் செல்வ நிலை சிறக்கவேண்டுமானால், அந்நாடு கைத்தொழிலாற் சிறந்து, கடல்வாணிபம் கொண்ட நாடாகத் திகழ்தல் வேண்டும்; தமிழகத்தின் கடற்றுறைகள் பலவற்றிலும், கடல்கடந்த நாடுகளினின்றும், பல்வேறு பண்டங்களை ஏற்றிக்கொண்டு, வாணிபம் கருதிவந்த நாவாய்கள் பல நிற்கும். இக்கால நாவாய்கள், எண்ணெய் முதலாயின துணைகொண்டு பொறிகள் இயக்க இயங்குவதுபோல் 1.Television. 2. Telescope.