பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க பி ல ர் به யும், இருபுறமும் இருயானைகள் நின்று நீர்சொரியத் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் காட்சியையும் கண்டு களித்துள்ளார் கபிலர்; தெய்வம், கொடியோரைத் துன்புறுத் தும்; "மன்ற மராஅத்த பேஎம் முதிர்கடவுள் கொடியோர்த் தெவ்றூஉம்"; தேவர் உலக வாழ்வு, இவ்வுலக வாழ்வினும் இன்பம் நிறைந்தது; "இனிது எனப்படும் புத்தேள் நாடு;" அருந்ததி கற்பிற் சிறந்தவள்; "வடமீன் புரையும் கற்பு" என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார் கபிலர். அழல் ஒம்புதல் அந்தணர் தொழில், "அழல் புறந் தரூஉம் அந்தணர்;" அழல் ஓம்ப நெய் வேண்டும். நெய் பெய்தீ:" மலர் இட்டு வழிபாடு செய்வதைக் கடவுளர் விரும்புவர்; 'நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா,” என்ற இக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் கபிலர். இந்தக் கடவுளர்களில், எந்தக் கடவுளை அவர் வழிபடு கடவுளாகக் கொண்டார் என்பதை அறியமுடியவில்லை எனினும், கடவுளுண்மையினையும், வழிபாட்டுச் சிறப்பினையும் உணர்ந்த வைதீக சமயத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இனி, "பொய்யடிமை இல்லாத புலவர்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிடுவது, சங்கப் புலவர்களையே என்று நம்பியாண்டார் நம்பி நம்பினர்; அதனால், "கபிலர் ஆலவாய் அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக்கவி பல பாடும் புலவர்,” என்று பாடிக் கபிலர், சிவனை வழிபடும் சைவர் என்று கூறினார்; நம்பியாண்டார் கூறுவதை நம்புவோரும் உளர்; ஆனால், நம்பியாண்டார் நம்பியின் திருவந்தாதியை மூலநூலாகக் கொண்டு பெரியபுராணம் பாடிய சேக்கிழார், சங்கப் புலவரைப் பற்றி நம்பியாண்டார் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்;ஆகவே,சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிட்டது சங்கப் புலவரை அன்று என்பது உறுதியாகும்; ஆகவே, சைவர் என்ற கொள்கைக்கு ஆதாரமில்லாமை அறிக.