பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் க. பிறப்பு, குலம், சமயம் உலக உயர்தனிச் செம்மொழிகளுள் தலைமையானது தமிழ்மொழி என்ற பெருமையைப் பெற்றுத்தந்தவர், மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த புலவர் பெருமக்களாவர். அப் புலவர்பெருமக்களுள் முதற்கண் வைத்து எண்ணப்படும் பெருமை மிக்க முதுபெரும் புலவர்கள் நக்கீரர், கபிலர், பரணர் என்ற மூவராவர். மூவருள் ஒருவர் என்ற பெருமையினையுடைய கபிலரைப் பெற்ற பெற்றோர் யாவர்? அவரை உலகிற்குத் தந்து உயர் புகழ்கொண்ட ஊர் எது? என்ற கேள்விகளுக்கு நம்மால் விடை காண முடியவில்லை. கபிலரின் தாய் தந்தையர், ஆதியும் பகவனும் ஆவர் எனவும், அவர் பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவாரூர் எனவும், பாண்டியநாட்டுத் திருவாதவூர் எனவும், அவர் உடன்பிறந்தவர் உப்பை, உறுவை, அவ்வை, வள்ளி, வள்ளுவர், அதிகமான் என்ற அறுவர் எனவும் சில கதைகள் கூறுகின்றன. இலக்கண் நூல்களுள், கபில பரணர்’ என்ற தொடர் வருவதைக் கொண்டு, கபிலரின் நண்பர் பரணர் என்று முடிவு செய்வோரும், “பின்னமில் கபிலன் தோழன் பெயரிடைக் காடன்” என்ற பாட்டை ஆதாரமாகக்கொண்டு, கபிலரின் தோழர்களுள் இடைக்காடரும் ஒருவர் என்று முடிவு செய்வோரும் உளர். இவ்வாறு, இக் கதைகள் கூறுவன எல்லாவற்றை யும் உண்மையெனக் கொள்ளுவதற்கு இல்லை என்பது, க.-1