பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 க பி ல ர்

“கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் ” என்ற பகுதியில் விளக்கப்படும். கபிலர் பிறந்த இடத்தையும், அவர் தாய் தந்தையரையும் எப்படி எவரும் அறியாரோ, அவ்வாறே, 'அவர் வாழ்வின் பிறபகுதிகளையும் எவரும் அறியார். அவருடைய பிள்ளைப்பருவம், பள்ளிவாழ்வு, இல்வாழ்க்கை இவை எவ்வாறு இருந்தன என்பதையும் எவரும் அறியார்; அவர் மனைவி யார்? அவர் எத்தகையவர் அவருக்கு எத்தனை மக்கள்' என்ற கேள்விகட்கும் விடை காணல் இயலாது. அவர் வாழ்க்கை என நாம் அறியக்கூடியன எல்லாம் அரசர் சிலரைச் சார்ந்து பாடல் பாடிப் பரிசில்பெற்று வாழ்ந்த சில நிகழ்ச்சிகளேயாம். தமிழகம், நில நூல் முறைக்கேற்ப, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களாகப் பிரிக்கப்பட்டது; அதைப்போன்றே தமிழர்களும், அவ்வந்நிலங்களில் தாம் மேற்கொண்டிருந்த தொழில்முறைக் கேற்ப, முறையே ஆயர், வேட்டுவர், உழவர், பரதவர், மறவர் எனப் பிரித்து அழைக்கப்பட்டனர்; என்றாலும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவும் அத் தமிழர்களிடையே பண்டே இருந்தது என்பது தொல்காப்பியம் போன்ற பெருநூல்களால் விளங்கும். அந்நால்வருள் அந்தணர் என்பவர், மார்பில் நூலும், கையில் தண்டு கமண்டலமும் கொண்டவர். "நூலே காகம் முக்கோல் மனையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய," என்று தொல்காப்பியர் கூறுவர். நான்மறை உணர்ந்தவர், "மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்," என்பதால் நான்மறை ஒதுதல் அந்தணர் தொழில் என வள்ளுவரும் கூறுவது காண்க. அந் நான்மறையனை எழுதாக்கிளவி” என்று அழைத்தனர். வேள்வி செய்தலும், பிறர்க்கு அறிவுரை கூறலும் அந்தணர் தொழில், அரசர் இல்லாக் காலத்தில் நாடாளும் உரிமையும் அவர்க்கு உண்டு.'அந்தணாளர்க்கு அரசுவரைவின்றே' என்பர் தொல்காப்பியர். எவ்வுயிரும் தம்முயிர் என எண்ணும் அருட்பேருள்ளம் உடையவர்; அவர்,