பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காவல பாவலர்கள் தான்; அதனல் அவன் பெயர் கூத்தம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என வழங்குவதாயிற்று' என்று கூறுவர் சிலர், கிள்ளி, வளவன் என்பன சோழர்களேக் குறிப்பன போலவும், வழுதி, மாறன் என்பன பாண்டியர்களேக் குறிப் பன போலவும், கோதை என்பது சேரர்களேக் குறிக் வரும் பெயர்களுள் ஒன்ரும். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்தவை இரண்டு ; ஒன்று, இரவுக்குறி வந்து நிற்கும் தலைமகன்பால் அவன் வரும்வழி ஏதம் கூறி வருதலே விலக்கி விரைதலே வேண்டும் அகநானூற்றுப் பாடல்; மற்ருென்று, இறந்த தன் மனேவியை ஈம ஒள்ளழல் எரிப்பதுகண்டு வருந்திப் பாடிய கையறு கிலேச்செய்யுள்; அது புறநானூற்றில் வந்துள்ளது; அகநானூற்றுப் பாடலில் சின்குட்களுக்கு முன்னரே பிறந்ததும், தளர்நடைகொண்டு அசைந்து அசைந்து இயங்குவதுமாகிய தன் கன்று, அருவிகளின் இன்னேசை .யால் மயங்கி உறங்கிக்கொண்டிருக்க, அதற்குக் காவலாய்த் தன் பிடியினேத் தழுவிக்கொண்டு கிற்கும் களிறு ஒன்றின் அன்பு வாழ்க்கையினேயும், அவ்வன்பு வாழ்க்கைக்கு ஊறு விளக்கச் சூழ்ந்துநிற்கும் மலேக் குகைகளிலிருந்தும் முழங் கும் புலிகளின் கொடுவாழ்க்கையினேயும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்; நும்மைப் பிரியாது கலந்திருப்பதை மகிழ்ந்து வரவேற்கிருேம் எனினும், நீ வரும் வழியேதம் கண்டு விடியும்வரை நீர்கலங்கும் கண்களோடு கிற்க வேண்டியவராகிருேம், ஆகவே இரவு வருதலைத் தவிர்க எனக் கூறும் மகளிரின் அன்பு உள்ளத்தையும், தலைமக. அனுக்குக் கேடு உண்டாகுமோ என அஞ்சும் அவர்தம் அருள் உள்ளத்தையும் எடுத்துக் கர்ட்டியுள்ளார்; மாக்கோதை யின் குடிப்பற்று குன்றிலிட்ட விளக்கெனத் தோன்றி விளங்குவதை இப் பாட்டில் காண்கிருேம் , யானைக்கன்றை உறங்கவைக்கும் அருவியோசைக்குத் தான் பிறந்த சேரர் குடிவந்த முன்ைேனகிய பெருஞ்சோற்றுதியன் சேர லாதன் என்பான் அளித்த சோற்றுப் பரிசிலினை அவன்