பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான்......... மாக்கோதை 15. அம்ச்சிாலே அடைந்து பெற்று உண்ணவருவார் ஆண்டுக் செய்யும் பேரொலியினே உவமையாக்கிக் கூறியதோடு, அவ் .வுதியன், கொடுப்பதைத் தன் பிறவிக்கடமையைாகக் கொண்டவன் ; இவர் ஏதிலார் ; இவர் இனியார் என்ற எண்ணமற்ற நடுகின்ற உள்ளத்தவன் என்று பாராட்டியும் உள்ளார் : "கொடைக்கடன் ஏன்ற கோடா கெஞ்சின் உதியன் அட்டில் போல ஒலியெழுந்து அருவி யார்க்கும் பெருவரைச் சிலம்பின் ஈன்றணி இரும்பிடிதழி இக் களிறு தன் தாங்குகடைக் குழவி துயில்புறங் காப்ப ஒடுங்களே புலம்பப் போகிக் கடுங்கண் வாள்வரி வயப்புலி கன்முழை உரற.' (அகம்: கசு :) அவர் பாடிய புறநானூற்றுப் பாடல், மாக்கோதை தன் மனேவியால் கொண்டிருந்த போன்பைப் புலப்படுத்து வதாம். மாக்கோதையின் மனேவியாராகிய அரசமாதேவி யார் இறந்துவிட்டார்; இறந்தார் உடலே ஈமத்தியிலிட்டுக் கொளுத்திவிட்டனர்; எரிகின்றது அவர் உடல் அதைக் கண்டு கிற்கும் மாக்கோதையார் உள்ளம் கழிந்தகாலக் காதல்வாழ்வை எண்ணித் துயர் உறுவதாயிற்று ; அவ ளோடு கூடிவாழ்ந்த காலத்தே பிரியேன் பிரியின் உயிர் தரியேன் என்றும், காதல், காதலின்றேல் சாதல்' என்றும் வழங்கிய வன்புரைகளே எண்ணினர்; ஒருவரை யொருவர் பிரிந்து வாழமுடியுமா என வாழ்ந்த அக்கால வாழ்க்கையினே எண்ணிப்பார்த்தார்; அவர் உள்ளம் நாணிற்று : 'இன்று அவள் இறந்துவிட்டாள்; அவளுடல் என் கண்முன்னரே இதோ பற்றி எரிகிறது; அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ; எனினும் என் உயிர் போய்விடவில்லை. வாழ்கிறது என் உயிர் : இங்கிலே என் னேப் பெரிதும் வருத்துகிறது; அவள் இறந்ததால் யான் பெற்ற நோய், அத்துணேப் பெரிதன்று ; பிரிவுத்துயள் உண்மையில் மிகப் பெரிதாயின், அஃது என் உயிரையு