பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芒笼 காவல பாவலர்கள் வனபோல் தோன்றியவிடத்தும் அவர்கள்பால் சினவாது, அவர் கூறுவன ஏற்றுப் போற்றிவந்துள்ளனர், "நான் ஒரு பேரரசன்; என்னிடம் இரந்து கிற்கும் புலவணிவன் ; இவன் எனக்குப் புத்தி புகட்டுவதா?' என அவர்கள் எண்ணினால்லர். செவிகைப்பச் சொற் பொறுக்கும் இப்பண்புடைமை கிள்ளி வளவன்பாலும் அமைந்து கிடந்தது : “அரசே! போர்க்களத்தே எதிர்த்துவரும் பகைவர் பெரும்படையைப் பாழ் செய்து பெறும் வெற்றி கின் படைப்பெருமையால் ஆவதன்று அது, நிலத்தை உழுது கெல்விளக்கும் உழவர் திந்த வெற்றியாம் ; ஆகவே, இதை உண்மையில் உணர்ந்தா யாயின், உழவுதொழிலேப் பழித்துரைக்கும் அறிவற்ருேர் கூறுவனவற்றை மேற்கொள்ளாது, ஏர்த்தொழில்: கொண்டு வாழ்வார் தம் இன்னல் போக்கி, அவர் துணை கொண்டு ஏனேக்குடிகளேயும் காப்பாற்றுவதைக் கடமை யாகக் கொள்ளின், கின் பகைவரெல்லாம் நின்னேப் பணிந்து கிற்பர்' "வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்று.சால் மருங்கின் ஈன்றதன் பயனே ; மாரி பொய்ப்பினும், வாரி குன்றி னும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம், - அதுகற் கறிந்தனே யாயின், நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது, பகடுபுறம் தருகர் பாரம் ஓம்பிக் குடிபுறம் தருகுவை யாயின் கின் அடிபுறம் தருகுவர் அடங்கா தோரே (புறம்: கூடு) என்று தன் எதிரிலேயே ஏர்த்தொழிலைப் போற்றிப் புகழ்ந்தும், தன் தொழிலாம் போர்த்கதாழிலைப் பழித்தும் கின்ற வெள்ளேக்குடி நாகஞர்பால் சினம் கொள்ளாது, அவ்ர் அவ்வறிவுரை கூறுவதற்குக் காரணமாம் அவர் துறையறிந்து, அவர் தம் நிலத்திற்குச் சேர இருந்த இன்ற்க்கடனப் போக்கிச் சிறப்பளித்தான் கிள்ளிவளவின்