பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லுருத்திரன் 77. ஆயர் ஆடு, மாடு, எருமைகளோடு வாழ்பவர்; இவற். அறுள் ஆனேறு மிகவும் ஆற்றலுடையது. ஆனேற்றை அடக்கி ஆள்வது அத்துணே எளிதன்று; அதனுல் உயிர் துறந்தாரும் உளர். ஆகவே மகளேப்பெற்ற ஆயன், எத் துணேக் கொடிய காளேயையும் அடக்கியாளும் ஆற்றல் தன் மகளே மனப்போனுக்கு உண்டா என அறிந்தே மனம் செய்து தருவன்: அம்மணமகனேத் தேர்ந்தெடுக்கும் விழாவே, ஏறுதழுவல். மகள் பிறந்த அன்றே, தங்கள் மனேயில்வளர் ஆனேற். அறுக்கன்று ஒன்றைக் கட்டவிழ்த்துவிடுவர். அவள் வளர, வளரக் காளேயும் காட்டுட்புகுந்து விரும்பியாங்கு மேய்ந்து வளர்ந்துவரும். மகள் ம்ணப்பருவம் எய்தினுள் என அறிந்தவுடனேயே காளேயை அரிதிற்பற்றிக் கொணர்வர். இவ்வாறே, அவ்வூரில் மணப்பருவம் எய்திய மகளிர் ஒவ்வொருவருக்கும் விடப்பட்ட காளேகளேயெல்லாம் கொணர்வர். ஊர்க்கோடியில் உள்ள பெருவெளியில் வேலி அமைத்துக் காளேகளே அதனுள்விடுவர்; மகளிர் அணிபல அணிந்துவந்து ஒருபால் நிற்பர்; மகளிரை மணக்க விரும்பும் ஆடவரும் ஆண்டு வந்து நிற்பர் ஊர்க் தலைவன் முன்வந்து, ஒவ்வொரு பெண்ணேயும் அவளுக்காக விடப்பட்ட காளேயையும் முறையே காட்டி, இதை அடக்கி யோன் இவளே மணப்பன்; இதை அடக்கியோன் இவளே மணப்பன் என்று கூறி அமைவன உடனே காளேகளுக்குச் சின்ம் பிறக்குமாறு பறை முதலாயினவற்றை முழக்குவர்; பறையொலி கேட்டுச் சினந்து நிற்கும் அக்காளேகள். அக் கிலேயில், இளைஞர்கள், ஏறுகள் கிற்கும் வேலியினுட்புகுந்து யார் யார், யார் யாரை மணக்க விரும்புகின்றனரோ, அவரவர்க்கென விடப்பட்ட காளேகளைத் தேர்ந்து போராடி அடக்கி ஆள்வர். இந்த முயற்சியில் இளைஞர்கள் பெரும் புண் பெறுதலும் உண்டு; சிலர் உயிரையும் இழப்பர்; இறுதியில் காளேயை அடக்கிய காளபோல்வானுக்கு மகளே மணம்செய்து கொடுப்பர். இது பழந்தமிழர் நாக ரிகம்; இவ்விழா இன்றும், தைத்திங்கள் தொடக்கத்தே