உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கிழார்ப் பெயர்பெற்ருேர் கூறியுள்ளார் ஒருபாட்டில். வேந்தே வெற்றியாலாம் புகழே விரும்பிய நீ, அதைப் பெறுங்கருத்துடையையாய், எப்பொழுதும் படைகளோடு பாசறையில் வாழ்வதை விரும்புகின்றனேயே யன்றி நகர்வாழ்தலை நச்சுகின்ருயல்லை; பகைவர்தம் பேரமண்களைத் தம் கோடும் மழுங்குமாறு குத்தி அழிக்கும் கின் யானைப்படையும் போர் ஆர்வம் மிக்குளது; போர் என்ற உடனே பூரிக்கும் தோளுடைய கின் வீரர்கள், பகைத்துச் செல்லும் நாடு, காடுகளுக்கப் பால் மிகச் சேய்மைக்கண் உளது; ஆதலின் ஆண்டுச் செல்லேம் என்றுகூருர்; இத்தகைய கின் இயல்பும், கின் படையின் இயல்பும் உணர்ந்த வடநாட்டில் வாழும் கின் பகையரசர்கள், நலங்கிள்ளியின் பெரும்படை எந்த நேரத் திலும் வந்துவிடும் என்ற அச்சமுடையாாய், உறக்கம் ஒழித்து அழிவர்,” என்று கூறிய இப்பாராட்டுரை நலங் கிள்ளியின் படைப்பெருமையினேப் பாரோர் உணரப் பயன்படுமன்ருே ? - 'நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல்லாயே; நூதிமுகம் மழுங்க மண்டி ஒன்னர் கடிமதில் பாயும் கின்களி றடங்கலவே; போர் எனிற் புகலும் புனைகழல் மறவர் 'காடிடைக் கிடந்த நாடு, கனிசேய; செல்வே மல்லேம்' என்னர்; வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே' -(புறம் கூக) நலங்கிள்ளியின் வெற்றிச் சிறப்பினை இவ்வாறு பொது வாகப் பாராட்டிய புலவர், அவன் சேரர்தலைநகராம் வஞ்சிமாநகரையும், பாண்டியர் தலைநகராம் மதுரைமா நகரையும் வென்று கைக்கொண்ட சிகழ்ச்சிகளையும் எடுத் துக்கூறிப் போற்றியுள்ளார்; அவ்வெற்றியை அவர் அறி