உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கிழார்ப் பெயர்பெற்ருேர் தொழிலிற் சிறந்தார் எக்குடியில் வந்தாராயினும் அவர்க்கு * ஏகுதி ”ப் பட்டத்தினேயும், வணிகத் தொழில் புரிந்து சிறந்தார்க்கு, அவர் வர்தகுடி நோக்காது, அவர்தம் தொழிலின் நேர்மையும் திறமும் நோக்கி : எட்டி’ப் பட்டத்தினையும் இட்டுச் சி ற ப் பி க் த ன ர் ; அதைப் போன்றே, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர் ஆகிய இக்குடிகளிற் பிறந்து, உழவுத்தொழில் மேற் கொண்டு சிறந்தார் அனைவரையும், கிழார்' என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர் என்று கொள்வது பொருங்கும் என்க, இதனுல், கிழார் என்பது குடிபற்றிவந்த பெயரன்று ; தொழில்பற்றி வந்த பெயராம் என்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு, உழவுத்தொழில் மேற்கொண்டுயர்ந்து, உலகாளும் அரசர்களாலும், பிறராலும் சிறப்பிக்கப் பெற்று, அவர் பாராட்டி வழங்கிய ' கிழார்’ என்ற பட்டத்தையும் மேற்கொண்டு வாழ்ந்த மக்கள் பலருள், புலமையிற் சிறந்து புகழ்பெற்றவர் எனச் சங்கநூல்களால் அறியப் பெற்றவர் காற்பத்தொருவராவர்; அவர்கள் வா லாற்றினே அவர்கள் பாடிய பாக்கள் துணைகொண்டு ஒரு வாறு வகுத்துரைப்பதே இச்சிறு நூல்.