உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அரிசில்கிழார் தமிழகத்து ஊர்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் யாதோ ஒரு காரணம்பற்றியே பெயர் பெற்றிருக்கும். பாதுவாகக் கம்மைச் சார்ந்துள்ள மலைகள், காடுகள், ஆறுகள் இவற்றின் பெயர் பெற்றிருப்பது பெருவழக் காம், வெண்குன்றம், நெடுங்குன்றம், பரங்குன்றம் என் பன, மலைகளால் பெயர்பெற்ற ஊர்கள் ; திருப்பனங்காடு, திருவாலங்காடு என்பன காடுகளால் பெயர்பெற்ற ஊர் கள் ; குமரிக்கோடு, குமரிமலை என்பன குமரியாற்றை அடுத்திருப்பதால் பெயர் பெற்றன ; வடார்க்காடு மாவட் டக்கில் ஒடும் சேயாற்றின் கரைக்கண் அமைந்த திருவோத்தார், சேயாறு எனவும் வழங்கப்பெறுதல் ஆம் ன் பெயரைத் தன் பெயராக் கொண்ட ஊருக்கு ஒர் எடுத்துக்காட்டாம். இவ்வாறு தம்மை அடுத்துப் பாயும் ஆற்றின் பெயரே பெயரெனக் கொண்ட பேரூர்களுள் அரிசில் என்பதும் ஒன்று. தமிழகத்தின் பேராறுகளில் தலைமைக்கண் கிற்கும் தகுதிவாய்ந்த ஆறு காவிரி. அவ் யாற்ருேடு வந்து கலக் கும் ஆறுகளும், அகினின்றும் பிரிந்து பாயும் ஆறுகளும் பல. அவ்வாறு பிரிந்து பாயும் ஆறுகளுள் அரிசிலாறு என்பதும் ஒன்று. இவ்வரிசிலாற்றங்கரையில், அரிசில் என்ற அவ்யாற்றின் பெயர் தாங்கிய ஒர் ஊர் பண்டு இருங் தது எனப் பழங் கமிழ்ப் பாடல்கள் பகருகின்றன. ஆறுகள், என்றும் ஒருவழியே மேற்கொண்டு ஒடும் என எதிர்பார்த்தல் இயலாது ; காலம் செல்லச் செல்ல, அவை இடம் மாறி ஒடுதலும் உண்டு. ஆனல் ஆறுகள் இடம் மாறுவதேபோல், அவ் யாறுகளின் கரைக்கண் அமைந்த ஊர்கள் இடம் மாறுவது இயல்பன் று. இதனுல் ஒரு காலத்தில், ஆற்றின் கரைக்கண் அமைந்து, அவ் யாற்றின் பெயர்பெற்றிருந்த ஒர் ஊர், பிற்காலத்தே அவ் ஆற்றிற்கு மிகச் சேய்மைக் கண்ணதாய், அவ் ஆற்றுத் தொடர்பற்றுத் தோன்றுதலும் உண்டு. இந்தக் காரணங்