உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர் மூலங்கிழார் 55. முடைந்து செய்யப்பெற்ற உண்கலத்தில் இட்டு வருவார் அனைவர்க்கும் வழங்கி மகிழ்விப்பன் ; காரியாதியின் இக் கொடைச் சிறப்பினைக் கண்டு களித்த ஆவூர் மூலங்கிழார், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப்போன்ற பேரரசர்களின் அரண்மனை வாயிலில், பலநாள் பாடி கின்று, அவர்களைக் காணப்பெருமல் கண்ணுெளியும் கெட வருங்கிக் காத்திருந்து, இறுதியில், இவனேர் புலவன்; இவனுக்களிக்காது போயின் பழிப்பன் என அஞ்சி அளித்த யானைப் பரிசிலைப்பெற்ற நிகழ்ச்சியை கினைந்து கொண்டார்; உள்ளன்புடன் உவந்தியும் காரியாகியின் கொடைப் பொருளாம் இச்சோற்றின் முன், பன்னுள் பாடிப்பெற்ற அவ் யானைப் பரிசில் சிறிதும் ஒவ்வாமையினே உணர்ந்தார் ; உடனே, காரியாதியின் கொடைச்சிறப்புத் தோன்ற ஒரு பாடல்பாடி மகிழ்ந்தார் : ' ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர் வெளிறுகண் போகப் பன்னுள் திாங்கிப் பாடிப்பெற்ற பொன்னணி யானை, பெரும்பெயராதி பிணங்கரில் குடநாட்டு எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞனம் பெருத்த பசுவெள் அமலை வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய இரும் பனங்குடையில் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சாலாதே.’ (புறம்: கன எ) பேரரசர்களேயும், குறுகிலத்தவர்களையும் பாராட்டிப் பழகிய ஆவூர் மூலங்கிழார், அந்தணர் குலத்துவந்தார் ஒருவரையும் பாராட்டியுள்ளார். சோழநாட்டில், முடி கொண்டானுற்றங்கரையில் உள்ள பூஞ்சாற் றார் என்ற ஊரில் கெளனியப் பார்ப்பனர் குடியில், விண்ணத்தாயன் என்ற அந்தணர் ஒருவர் இருந்தார்; அவர் முன்னேர், வேதியர்க்கழகு வேதமோதுதல் என்ற கொள்கையினராய், வேக நாற் பொருளுணர்ந்து, அப்பொருளைப் புறச்சமயத் தாரும் ஏற்கும் வகை எடுத்தியம்பவல்ல அறிவுத்தெளிவின