உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கிழார்ப் பெயர்பெற்ருேர் ாவர். அவர் வழிவந்த விண்ணந்தரயனும், தன் குல வொழுக்கத்திற்கு மாறுதலின்றி, தன் மனைவிமார் எவல் செய்ய், வேத நூல் முறைப்படி வேள்வி பல செய்து, அவ் வேள்வி முடிவில், வ்ந்திருந்தார் அனைவர்க்கும் விருந்தளித் துப் போற்றினன். ஆவூர் மூலங்கிழார், அந்தணன் சிறப்பும், அவன் ஆற்றும் வேள்வியின் பெருமையும் உணர்ந்தவராதலின், அவ்வேள்வி காணச்சென்று, உட னிருந்து கண்டு களித்ததோடு அவனல் பெரிதும் சிறப்புச் செய்யப்பெற்ருர் ; உண்பதற்கும், கின்பதற்கும் ஆம் பல்வேறு வகைப்பொருள் பல பெற்றதோடு, ஊர்ந்து செல்வதற்காம் ஊர்திகள் பலவும் பெற்றுக்கொண்டு தம் ஊர் அடைந்து மகிழ்ந்துவாழ்ந்தார். அந்தணன் முன்னேர் பெருமையும், அவன் செய்த வேள்வியின் சிறப்பும், அவன் அளித்த கொடையின் பெருமையும் தோன்றி விளங்கப் பாடிப் புகழ்ந்த புலவர், அதில் தம் ஊர், காவிரிபாய் நாடாம் என்றும் கூறித் தம் வரலாறு பற்றியும் சிறிது உணர்த்தியுள்ளார்.

  • பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை எம்மூாாங்கண் உண்டும், தின்றும், ஊர்ந்தும் ஆடுகம்.’ (புறம்: கச்சு) தாமே போருக்குச் செல்லார்; வலியவந்த போரை விடார் ; போர்க்களம் புகுந்தவிடத்தும், வந்த பகைவர் தம்மொத்த பெரு வீரராவர் எனக் கண்ட பிறகே அவ ரோடு போரிடுவர்; தம்மினும் ஆற்றல் குறைந்தார் மாட்டுப் போரிடுவதையும், தோற்மப் புறங்காட்டி ஒடு வாரை, மேலும் ஒட ஓட விரட்டிச்சென்று வெற்றி கொள்வதையும் வெறுப்பர் ; ஆற்றல் குறைந்து அழிந்' தோடும் பகைவர்மீது படையெடாமையினேப் பேராண்மை யெனப் பாராட்டுவர் ; அஞ்சிய பகைமீது அம்பேவுதலைப் பேடிச்செயல் எனப் பழிப்பர். பழந்தமிழரிடையே காணப் படும் இப்போர்ப் பண்புகளே, வீரன் ஒருவனேப் பாராட்டு வார்போல் எடுத்துக்காட்டியுள்ளார் ஆவூர் மூலங்கிழார்.