உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்குன்றார் கிழார் 67 அவன் பெற்ற வெற்றியும், அவ்வெற்றி பெற்ற அவன் பெருந்தகைமையும், அவருக்கு அந்த அளவோடு அமைதி தரவில்லை; இவன் இளையன் என்பது மட்டுமன்றே இவ லுக்குத் துணையாக கின்றவரும் ஒருவரும் இலரே ! மேற்சென்று தாக்குமளவு பெரும்படையினைச் சேர்த்து வைத்தவனும் அன்றே ! அதற்கு வேண்டும் காலமும் அவனுக்கு இல்லையே! இவன் சிலை இதுவாயின், வந்த பகைவர்களின் பெருமையினே வாய்விட்டுக் கூறுதற்கும் இயலாதே வந்த பகைவர் எழுபெரும் அரசாாவர்; அவ் வேழரசர்களின் எ ழு படைக ளு ம் ஒன்று கூடியன்ருே இவனே எதிர்த்தன ? மேலும், அவர்கள் களம் பல கண்டு போர் அறிவுபெற்ற பேரறிவாளராவர் ; பகைவன் நாட்டுட் புகுந்து தாக்குமளவு பேராற்றல் வாய்ந்தவர் ; அத்தகை யார் வந்து தாக்கினர் இவனே ; இவ்வொருவனே எதிர்க்க ஏழரசர்கள் வந்தனர் என்பதே இவன் பெருமைக்கோர் எடுத்துக்காட்டாம் என்ருல், அவ்வாறு கூடி எதிர்த்த எழரசர்களையும், இவன் ஒருவனுகவே எதிர்த்துப் போரிட்டு வெற்றியும்பெற்ருன் எனின், இவன் பேராண்மை யினே என்னென்பது இஃது எங்கும் நிகழாத நிகழ்ச்சி யன்ருே ? காணுதன. கண்டன எம்கண்கள் ! ஒருவனே ஒருவன் தாக்குவதும், ஒருவனே ஒருவன் வெற்றி கொள்வ தும் உலகியல்; எங்கும் கிகழக்கூடியது ; அங்கிகழ்ச்சி உலகிற்குப் புதியதன்று ; ஆனல், ஏழாசர் கூடி ஒருவனே எதிர்ப்பதும், அவ்வொருவன், அவ்வேழரசர்களையும் வென்று அழிப்பதும் அம்மம்ம அரிது அரிது! அதிசயம் அதிசயம்!! இதுபோன்ற நிகழ்ச்சி நிகழ்ந்ததாக யாம் இது வரை கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை; என்று வாய் விட்டுக்கூறி வியந்து பாராட்டினர் :

  • ஒருவனை ஒருவன் அடுதலும் தொ?லகலும்

புதுவதன்று; இவ்வுலகத்து இயற்கை இன்றின் ஊங்கோ கேளலம்: .. காடுகெழு கிருவின் பசும்பூட் செழியன்