பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ப ர ன ர்

வன்; தன் நண்பன் நன்னைேடு பகைகொண்டு, அவன் போர்தொடுத்த புன்னுட்டார்க்கு அஞ்சல் என்று அடைக் கலம் அளித்து ஆதரித்த ஆய் எயினனே அழித்தொழிக்க எண்ணினன். எண்ணிய எண்ணம் ஈடேறின், பாழிநகர்ப் பேய்க்குப் பலி தருவேன் எனக் கூறிப் பரவிஞன் ; ஆய் எயினனைப் பாழியில் எதிர்த்துப் போரிட்டான் ; எயி னன், மிகுதிலியின் படையில் பெரும்பகுதியினரைக் கொன்று குவித்தான்்; ஆயினும், எதிர்த்தார் எவரையும் அழிக்கும் ஆற்றல்வாய்ந்த ஆய் எயினன், மிஞலியோடு போரிட்டுத் தளர்ந்து இறந்து வீழ்ந்தான்் ; வீறெய்தி வெற்றிபெற்ற மிகுதிலி, வாக்களித்தவாறே பேய்க்குப் பலி கொடுத்து, களவேள்வியும் ஆற்றி மகிழ்ந்தான்். - மார்பும், தோளும் மறையப் போர்க்கவசம் பூண்டு களம் நோக்கிச்செல்லும் இயல்பினனை மிஞலி, தனக்கு உற்றதுயர் போக்கி உறுதுணை புரிந்தது அறிந்த நன்னன், தனக்குரியதும், வேளிர் பெரும்பொருளால் சிறைந்தது மான பாழிநகரையும் பாரத்தையும் நண்பனுக்கு நல்கி நன்றி செலுத்தினுன் ;

மிஞ்லியின் வரலாறு பரணர் பாட்டால்மட்டுமே அறி யப்படும்; அகத்துறைப்பாடல்கள் ஐக்கில் அவன் வரலாறு உரைக்கப்பட்டுளது; அவற்றுள் ஒரு செய்யுள், !

"முறையில் வழாஅது ஆற்றிப் பெற்ற

கறையடியானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின்அஞ்சுவரு பேஎய்க்கு ஊட்டெதிர் கொண்டவாய்மொழி மினிலி, புள்ளிற்கு எம் மாகிய பெரும்பெயர் வெள்ளத் தான்ே எயினன் கொன்று உவந்து ஒள்வாள் அமல ஆடிய ஞாட்பு: (அகம்: கச.)

తతావణతో, GiమgఎశGārఅయిత; Qaaf

பன் வேண்மான் ஆய் எயினன்' என, அவன் அழைக்கப்