பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பெருமை பெரும் புலவர்களுள்வைத்து மதிக்கத்தக்க பெருமை வாய்ந்த முதுபெரும் பெண்பாற் புலவராகிய ஒளவையார், பரணர் பெருமை யறிந்து பாராட்டியுள்ளார். ஒளவையார், அதிகமான் அஞ்சியைப் பாராட்டிப் பல பாக்கள் பாடி யுள்ளார். தன் பாடலைப் பெற்றமையே அதிகனுக்குப் புகழாம் என்று அறிவார் அவர் ; ஆணுல், அவன் அதனி லும் மிக்கோன் என்று பாராட்ட விரும்பினர்; அதற்கு அவர் கூறுகிருர் : “அதிய சின் வெற்றியே வெற்றி ! கின் வெற்றியின் சிறப்புக் கண்டு நான் பாராட்டியது பெரிது அன்று ; கின் வெற்றி குறித்துப் பாணர் பாராட்டியுள்ளார் எனின், வின் வெற்றிச் சிறப்பை என் னென்பது பரணர் பெரும் புலவர்; அவர் பாராட்டைப் பெறுவது எளியோரால் இயலாது ; செயற்கரும் செயல் செய்த பெரியோரே அவர் பாராட்டைப் பெறுதல் இயலும். அதை நீ பெற்றுவிட்டாய்,” என்று கூறிப் பரணர் பெருமையும், அவர் பாட்டின் அருமையும் தோன்ற பாராட்டியுள்ளார் எனின், பரணரின் பெருமையே பெருமை! அவர் புலமையின் அருமையேஅருமை !

f{ இன்றும், -

பரணன் பாடினன் மற்கொல் மற்றுே

முரண்மிகு கோவலூர் நூறிநின்

அரணடு திகிரி ஏந்திய தோளே!?

யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர், மனத்தது பாடவும், ஆசுவும் கெடவும் பாடல் தரும் கபிலர், பாணர், கல்லாடர்’ எனக் கூறுவதாலும், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர், “ஆரியம் நன்று, தமிழ் தீது? என்ருன் ஒருவனே அழிக்க நக்கீரர் பாடிய பாட்டு என்று மேற்கோள் காட்டிய "முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பாண கபிலரும் வாழி!” என்ற பாட்டில், அகத்தியரோடு ஒப்ப, பாணரும் நக்ரோல் வணங்கப்பட் டார் எனக் கூறுவதாலும், பரணர், அவ்விரு பேர்உரை யாசிரியர்கள் காலத்திலேயே, தெய்வத்தன்மை உடைய ாக மதிக்கப்பட்டார் என அறிதல் பெறப்படும்.