பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. பண்புடைமை

பண்டைத் தமிழ்ப் புலவர்கள், தம் புலமையின் பெரு மையினே உலகறியச் செய்வது என்ற ஒரே குறிக்கோள் உடையவரல்லர்; அது, பெரும்புலவர்க்கு அழகும் அன்று; மக்கள் வாழ்வு வளம்பெறத் தம் பாக்கள் துணைபுரிதல் வேண்டும் என்றே அவர்கள் விரும்புவர் ; அது அவர்கள் கடமையுமாகும்; புலமைாலம் ஒன்றே அமைவது செய் யுட்குச் சிறப்பளிக்காது ; உயரிய வாழ்விற்கு உறு துண்ையாய கருத்துக்கள் பலவற்றையும் அது கொண் டிருத்தல் வேண்டும். இதை உணர்ந்தவர் சங்கப்புலவர்கள். அதேைலயே ஆண் பெண் வாழ்க்கையின் வளங்கள் பல வற்றை வகுத்துக்காட்டும் அகத்துறைப் பாடல்களே அள்ளித் தங்துள்ளனர். பிறர் பழிகண்டு நாணலும், அவரை கண்ணி நல்லுரை பல நல்கித் திருத்திலும், பிறர் செய்த தவறு பெரிதாயின், அதை அவர் பேதைமை எனக் கொண்டு அமையாது, கடுஞ்சொல் கூறிக் கண்டித்தலும் செய்துள்ளனர் ; பேர் அரசர் இருவர் தம்முட் பகைத்துக் கொள்வதால், அவர் நாடு அழிவதைக் கண்டு அழுதுபாடி, அதன் வழியே அவ்வரசர்க்கு அறிவுவாச்செய்து தடுத் துள்ளனர்; இப்பண்புகள், புலவருட் புலவராய பாணர் பால் இருந்தன எனக்கூறல் மிகை. அவர் பாக்களைப் பார்க்கும் வாய்ப்பினேப்பெற்ற எவரும், அவர்பால் உள்ள

இவ்வரும்பெரும் பண்புகளை அறிவர்.

பொருமை, புலவர்க்கு அணிகலன்' என்ற அழி வுரை, பரணர் காலப் புலவர்களுக்குப் பொருந்தாது ; " அவன் என்ன புலவன் நான் பாடிய பாட்டிற்குப் பொருள்கூறத் தெரியுமா அவனுக்கு? நாலு பாட்டு நன்ருக மனப்பாடம் வராது ; மேடையில் கின்று ஒரு வார்த்தை கூறவராது ; இவனும் புலவனுய் வந்துவிட் டான் ' என்பன போன்ற புல்லுரைகளைப் பாணர் காலப் புலவர்களிடையே கேட்டல் இயலாது. இதற்கு மாருக, ஒரு புலவரை, ஒரு புலவர் உயர்வாக மதித்துப் பாராட்டும்