பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ப ரண ர்

போலவே, சேர்த்துவைத்த செல்வமும், பொருளற்ற வறியார்க்கு வழங்கிப் பயன்பெறுதல் வேண்டும்; அவ் வாறின்றி, பொருளின்றி வாடுவோர்க்கு வழங்காது வறிதே சேர்த்து வைக்கப்படுமாயின், பயனின்றிப் பாழாகும்;” “அற்ருர்க்கொன்று ஆற்ருதான்் செல்வம், மிகாலப் பெற்ருள் தமியள் மூத்தற்று.” இன்மை, ஈயாமை ஆகிய இவ்விரண்டின் கொடுமைகளையும் அறிந்தவர் பரணர்; ஆண் மகன் ஒருவன், ஒரு பெண்ணைக் கண்டான்; அவள் அணியும், அழகும், அருங்குணமும் கண்டு அவள் நல்ல வள்; நமக்கு ஏற்றவள் என்று உணர்ந்தான்் ; ஏற்றவள் என்பகை உணர்ந்த அவன், அவள் தனக்குக் கிடைத் தற்கு அரியள் என்பதை உணரும் அறிவற்றவனுயின்ை; அவ்வறிவு இல்லாமையால், அவளைப் பெறவேண்டும் என்ற பெருவேட்கை உடையணுய் வருந்துவானுயினுன் ; அந் நிலையில் அவன் கொள்ளும் ஆசை, பொருள் இல்லா தவன் பேரின்பம் பெறவிரும்பும் ஆசைபோல் அழியும்’ என்று கூறி, இன்மையின் இன்னுமையினே எடுத்துக் காட்டினர். -

இல்லோன் இன்பம் காமுற் ருங்கு, . அரிது வேட்டனையால் நெஞ்சே! காதலி, நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அளியள் ஆகுதல் அறியா தோயே.”

ஒரு பெண், ஒருவனே மணக்க விரும்புகிருள்; ஆனல், அவள் எண்ணம் ஈடேருது என்று அவள் ஆருயிர்த் தோழியர் கூறுகின்றனர்; அதற்கு அவள், விரும்பிய கண்வனைப் பெறேனயின், என் தாய் பேணி வளர்த்த என் அழகு, தன்பால் வந்து இன்மைகூறி இரத்துகின்றவர்க்குச் சிறிதும் கொடுக்காது சேர்த்துவைத்தோன் செல்வம் பிறரால் பாராட்டப்பெறுதல் இன்றி மறைந்து அழிவதே போல் அழிக,” என்று கூறியதாகப் பாடிய பாட்டில், பரணர், ஈயாது ஈட்டிய செல்வத்தின் இழிவினை விளக்கு

வதையும் காண்க :