பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ப ர ண ர்

களே, ஏற்றுப் போற்றினர் வரலாற்றைப் புனேந்துரைத்து, அதை மக்களுக்குக் காட்டி, அதை உணர்ந்து தாமும் மேற்கொள்ள அவர்கள் உள்ளத்தைத் தாண்டியுள்ளார் கள்.

உளநூல் உணர்ந்தோர், நீதி உரைகளை நேரே கூறுவ தினும், அங்கிேகள் பொதிந்த கதைகளைக் கூறுவதே. பெரும்பயன் அளிக்கும் என்பதை அறிவர். புலவர்கள், மக்கள்மனப்பண்பு அறிந்தவர்கள்; ஆகவே, தாங்கள் உணர்த்த விரும்பிய விழுமிய கொள்கைகளைச் சிறு கதை கள் போன்ற சிறுசிறு சிகழ்ச்சிகளே எடுத்துக் காட்டி, அவற்றின் வாயிலாக உணர்த்துவாராயினர். அவ்வாறு உணர்த்த வங்க பாடல்களே அகத்துறைப் பாடல்கள் ; அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன்றும் வாழ்வைப் பண் படுத்தும் பண்புடையன. ஆகவே, அவை அறிதற்குரியன; தமிழில் அகத்துறைப் பாடல்கள் அளவின்றிப் பெருகி யுள்ளன ; அவ்வளவையும் அறிதல் இயலாது ; ஆகவே, ப்ரனர் பாடிய அகத்துறைப் பாடல்கள் சிலவற்றையர்வது கண்டு, அவற்றின் வழி, அவர் காட்டும் அறிவுப்பாதை யில் அடியெடுத்து வைப்போம்ர்க.

மனம், இன்பநாட்டம் உடையது; இன்பம் கரும் பொருள்கள். உலகத்தில் எவ்வளவோ உள்ளன ; அவ்வெல் லாப் பொருள்களையும் அடைதல் வேண்டும் என மனம் விரும்பும்; அதில் தவறும் இல்லை; ஆனால், அப்பொருள். கள் இன்பம்தரும் என்பதை அறியும் அறிவு, அப். பொருள்கள் தனக்குக் கிடைக்கக் கூடியதுதான்ு என்பதை யும் அறிதல் வேண்டும்; கிடைக்கக் கூடியது என்பதை அறிந்தவழி, அவற்றைப் பெறும் வழிவகைகளே எண்ணிப் பெற முயற்சித்தல் நன்று. ஆனல், அப்பொருள் கிடைக் காது என்பதை அறிந்தால், பின்னரும், அப் பொருளையே எண்ணி ஏங்கியிருத்தல் கூடாது ; கிட்டாதாயின் வெட். டென மறத்தல் வேண்டும். இவ்வுண்மையினை உரைத்து அறிவூட்ட விரும்பும் பரணர் பாட்டொன்றுளது :