பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 3


  ஒன்று, தங்கள் வாழ்க்கை வரலாற்றைத் தாங்களாகவே எழுதிவைத்துச் சென்ற தம் வரலாறுகள் (Autobiogra. plhy}; இரான்டு, தங்கள் வாழ்க்கை வரலாற்றை முறையாக அன்றித், தங்கள் வாழ்க்கையில் அவ்வப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நிரல்படக் குறித்துவைக்கும் நாட் குறிப்பு (Dairy); மூன்று, ஒருவர் காலத்தே வாழ்ந்து , அவர் நண்பராகவோ, உறவின ராகவோ, அவரோடு கூடியிருந்து அறிந்து Grapதிவைத்த அவர் தம் வரலாறு' (Biography); நான்கு, புலவர்களுக்குத் தாம் அளித்த பரிசிலை உறுதி செய்ய, அரசர்கள் எழுதிவைத்த செப்பேடுகளும் கல் வெட்டுக்களும். இவையொன் தும் கிடைக்காத விடத்தில், அப்புலவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழாது போயினும், அவருக்குக் காலத்தால் சிறிதே பிற்பட்டோர் சிலர் எழுதி வைத்த குறிப்புக்களையும் துணையாகக் கொள்வர்.


  பழந்தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை அறிவதில் மேற் கடறியன துனைல புரிகின்றனவா? எனின், இல்லை என்றே கூறலாம். புலவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமாகவே வகுத்து எழுதிவிட்டுச் சென்றனரா? எனின் இல்லை. புலவர்கள், இலக்கிய வளர்ச்சியிலேயே கருர் துடையராய் நின்றுவிட்டனரே ஒழிய, தங்கள் வரலாற் றைத் தங்கள் வாயிலாகவே அளிக்கத் தவறிவிட்டனர் ; அதுமட்டும் அன்று ; அவர்கள், தங்கள் காலத்தில், தமி ழகத்தை ஆண்டிருந்த பேர் அரசர்களையும் குறுவிலமன் னர்களையும் கொடைவள்ளல்களையும் அவர் தம் நாடு மலை ஊர்களையும் நமக்கு அறிமுகம் ஆக்கியுள்ளார்கள் ; ஆனால், தங்கள் காலத்தில், தம்மோடு வாழ்ந்த, தம்மை யொத்த புலவர்களை நமக்கு அறிமுகமாக்கத் தவறிவிட்ட னர் ; புலவர்கள்வரலாறு ஒருவர் சுடற, மற்றவர் கேட் பது என்ற முறைப்படியே, பல தலைமுறைவரை அறியப் பட்டு வந்ததாகலின், அவர்கள் வரலாற்றில் உள்ள பகுதி விடப்பட்டும், இல்லாத பகுதி அழைக்கப்பெற்றும், ஒன்று ஒன்றாகத் திரிக்கப்பெற்றும், ஒருவர் வரலாறு, மற்ருெரு வர்க்கு ஏற்றி உரைக்கப்பட்டும் நிகழ்ந்திருத்தல் கூடும்.