பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10? பெண்பாற் புலவர்கள்

மகிழ்ந்து பாடியதையும் வெள்ளிவிதியார் பாராட்டி யுள்ளார். - . -

வெள்ளிவீதியார் பாடிய பாடல்கள் ப தின்மூன்று ; அவை அனைத்தும் அகத்துறை தழுவிய பாடல்கள்; அவற்றுள் ஒன்றே ஆண்மகன் கூற்று ; மற்றவை எல்லாம் தலைவி, தோழி, செவிலி என்ற பெண்பாற் கூற்றுக்களே. நற்றினை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய நூல்களில் வரும் அவர் பாடல்களே எல்லாம் கோவை செய்து கண்டால் வெள்ளிவீதியாரின் வாழ்க்கை வரலாறு ஒரு வாறு விளங்குதல் கூடும் என்பர்.

வெள்ளிவீதியார் தலைவன் ஒருவனேக்கண்டு காதல் கொண்டு வாழ்ந்து வந்தார் ; இடையில், அவன் தங்கள் திருமணத்திற்கும், இல்லறவாழ்விற்கும் பொருள் தேவை என்பது உணர்ந்து, அதைத் தேடிப் பெற்றுவர வெளி நாடு சென்றுவிட்டான் ; பல நாளாகியும் அவன் வாராமை பால் வெள்ளிவீதியார் வருத்தம் மிகுவதாயிற்று, ஒருநாள் காலை வீட்டைவிட்டு வெளியே வந்தார்; அவன் ஊருக்குப் போகும் வழியில் ஒரு நீர்நிலை; அதனருகே கின்றுகொண் டிருந்தார்; அங் கிலேயில் அவனூர்ப்பக்கமிருந்து நாரை யொன்று வந்து நீர்நிலையில் தங்கிற்று. அதைக்கண்ட அவர், “ஏ நாரையே நாள்தோறும் இங்கே நீ வருகின்ருய்; எங்களுர் நீர்நிலையில் உள்ள மீன்களைப் பிடித்து உண் கிருய்; மாலே ஆனதும் அவளுருக்குச் சென்றுவிடுகிருய் ; நான் வளைகழல வருந்துவதை நாள்தோறும் கானும் நீ; அதை ஒருநாளாவது அவருக்கு அறிவிப்பாய் என எதிர் பார்க்கிறேன்; ஆனல், நீ அதைச் செய்வதாகத் தெரிய வில்லை; ஏன்? உனக்கு என்பால் அன்பில்லையா? அல்லது மறதி மிகுதியோ?” என்று அதைக் கேட்பார்போல் தம் துயர்கூறி அழுதார். . . .

to சிறுவெள்ளாங் குருகே ! சிறுவெள்ளாங் குருகே !

எம்மூர் வந்து எம் ஒண்துறைத் திழை.இச் சினைக்கெளிற்று ஆர்கையை, அவரூர்ப் பெயர்தி ,