பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிவீதியார் . 105

அனைய அன்பினையோ? பெருமறவியையோ 斧。 கிழனி நல்லூர் மகிழ்நர்க்கு என் • . இழைநெகிழ் பருவால் செப்பா தோயே..?

பொருள் தேடிக்கொண்டு தலைவனும் வந்து சேர்க் தான்; ஆனல், வெள்ளிவீதியாரின் பெற்ருேர் அவரை அவனுக்கு மணம் செய்துகொடுக்கமாட்டார்போல் தோன் றிற்று ; மேலும், அந்த ஊரிலேயே இருந்து, பிறர் யாரும் அறியாவண்ணம் அவைேடு கூடி வாழ்தல் இனியும் இய லாது என்பதை உணர்ந்தனர் இருவரும்; தோழியோடு கலந்தனர்; அவனோடு அவலூர் சென்று மணந்துகொள் வது என்று முடிவு செய்தனர்; காலையில் எவரும் எழுச் திருக்காமுன் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான் ; வெள்ளிவீதியார் தனியே இருக் கிருர் ; அவர் உள்ளத்தில் எண்ணங்கள் பல தோன்றின; 'உற்ருேரும் பெற்ருேரும் அறியாவண்ணம் அயலான் ஒருவைேடு சென்றுவிடுதல் நாணுடை மகளிர்க்கு அழ கல்லவே ; அவ்வாறு செல்லும் மகளிரிடத்தே நாண் கில் லாது நீங்குமே ; என் கிலேயும் அதுதானே ? என்னேவிட்டு நாண் நீங்குவதா? நாண் இல்லா மகளிரும் மகளிரோ? தாயினும் சிறந்ததன்ருே நாண் ? அதை எவ்வாறு இழப் பேன்,” என்று ஏங்கினர் ; பின்னர்ச் சிறிது நேரம் கழித்து, நாணப்போற்றி அவரோடு செல்லாது போனுல், பின்னர் அவரைப் பெறுதல் முடியாது; பெற்ருேரும் பிறன் ஒருவனுக்கு என்னே மணம்செய்து வைத்துவிடுவர்; அங் நிலையில் என் கற்பு என்னும்? நானக் காட்டினும் கற்பன்ருே.சிறந்தது? நான் கற்புடைமகளாதல் வேண்டு மாயின் நாணே மறந்தே ஆகவேண்டும் ? அதை விட்டே ஆகவேண்டும்.” என்ற துணிபு பிறந்தது. மேலும் எண் ணங்கள் வளர்ந்தன. இந் நிலை என் உண்டாயிற்று ? என்ைேடு பிறந்து, என்ைேடு வளர்ந்த நாணே நானே கைவிடவேண்டிய இந் நிலை எதல்ை உண்டாயிற்று? நான் அவர்பால் காதல்கொண்டு காம நோயை வளரவிட்டதா லன்ருே காமநோய் என் மனத்திடை வளர வளர, அதன்