பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெண்பாற் புலவர்கள்

அவர் கவலையும் கண்ணிரும் கண்ட தோழி, அவருக்கு ஊக்கம் பிறக்கும்ாறு : அம்மா! அவர் எங்கே போய்விடு வார்? நிலத்தைக் குடைந்துகொண்டோ, மேகத்தில் துழைந்தோ, கடலைக் கடந்தோ மறைந்துபோயிருக்க மாட்டார் அவர்; இந்த உலகில்தானே எங்கேனும் இருக்கப் போகிருர் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீட்டிலும் தேடினல் அகப்படாமலா போவார் ? உறுதியாக அகப்படுவார்; அவரைத் தேடிப் பிடித்துவிட் லாம் ; நீ கவலை கொள்ளாதே,” என்று கூறித் தேற்றினுள்:

' நிலங்தொட்டுப் புகாஅர் ; வானம் எருர் :

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் ; நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரும் உளரோ, நம் காதலோாே? -

(குறுங் உட0). தோழி கூறிய அச்சொற்கள் அவருக்கு ஊக்கம் அளித்தன; தலைவனைத் தேடிக் காண்பது தம் கடனே என்பதை உணர்ந்தார்; அங்கிலையில், கணவனே இழந்து, கடுந்துயர் அடைந்து, அவனைத் தேடிக் காண எங்கெங்கோ அலேந்து அலைந்து துயர்உற்ற ஆதிமந்தியார் அவர் மனக் கண் முன்வந்து கின்ருர் ; சிறிது அச்சம் உண்டாயிற்று; அவரைப்போல் நானும் அலேந்து துன்புறவேண்டுமே என்று ஏங்கினர்.

' காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கடர்ந்து

ஆதிமந்தி போலப் பேதுற்று - அலந்தனென் உழல்வென் கொல்லோ ? - - - (அகம்: சடு) என்று ஏங்கினர். என்ருலும், தலைவன்பால் கொண்டுள்ள பெருங்காதல், அவனைத் தேடுவதால், வரும் துன்பத்தை மறக்கச் செய்தது. புறப்பட்டார்வீட்டை நோக்கி ; எங் கெங்கோ அலைந்தார் ; ஆனல், அந்தோ! அவர். முடிஷ் என்னுயிற்று என்பதை அறிய முடியவில்லை; வ்ெஸ்ளி