பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெண்பாற் புலவர்கள்

படுத்தப் போதியனவாம்; அவற்றுள் இரண்டைமட்டும் ஈண்டுத் தருகிறேன் :

அள்ளுர் நன்முல்லையார் வாழ்ந்த பாண்டிநாடு, செல் வத்திற் சிறந்த நாடு; அந்நாட்டில் வாழும் மக்கள் அழகிய அணிபல அணிவதில் ஆர்வமிக்கவர்; அவர் ஆர் வத்தை நிறைவேற்றித்தரும் வகையில் அழகிய அணிகளே ஆக்கித்தரும் ஆற்றல்மிக்க பொற்கொல்லர் பலர் பாண்டி காட்டில் பெருகி வாழ்ந்துவந்தனர்; ஆதலின், அப் பொற் கொல்லரையும், அவர்கள் தொழிலாற்றும் முறைகளேயும் அறிந்திருந்தனர் நம் முல்லையார் ; அவர்களுள் ஒரு பொற்கொல்லன், பொற்காசுமாலே ஒன்று செய்துகொண் டிருக்கிருன் , பொற்காசுகள் பவழவடிவில் அமைந்துள் ளன ; அவற்றினூடே துளையும் செய்யப்பட்டுளது ; அவற்றைக் கோப்பதற்கான பொற்கம்பியையும் இழைத்து வைத்துக்கொண்டுள்ளான் ; பொற்காசை இடதுகைப் பெருவிரல் ஆள்காட்டிவிால் இாண்டின் துனியில் பற்றிக் கொண்டான்; வலது கையில் பொற்கம்பியைப் பற்றி, அதன் கூரிய துணியை இடதுகையில் பற்றியுள்ள அப் பொற்காசின் இடையே அமைந்த துளையூடே செலுத்திக் கோத்துக் கொண்டிருக்கிருன் ; இக் காட்சியைக் கண்டு கண்டு மகிழ்ந்துள்ளார் நம் முல்லையார்; தடித்த பெரு விரல் கீழே இருக்க, ஆள்காட்டி விரல் சிறிது நீண்டு வளைந்து பெருவிரலின் துனியைச் சேர, அவ்விரண்டிற் கும் இடையே பொற்காசு அமைந்திருக்கும் காட்சி, அவர் கண்ணையும் கருத்தையும்விட்டு அகலவில்லை ; அதைக் கண்டு மகிழ்ந்த அவர், அவ்வூரை யடுத்த சோலேயுள் துழைந்து செல்கின்ருர் , அங்கே ஒரு வேப்பமாம், நன்கு பழுத்து விளங்குகிறது ; பழுத்த பழங்களைப் பறவைகள் பலவும் கூடிக் கவர்ந்து செல்கின்றன; அப் பறவைகளுள் ஒரு கிளி, தன் வளைந்த வாய்க்கிடையே நன்கு கனிந்த அப் பழங்களுள் ஒன்றைக் கவ்விப் பற்றிக்கொண்டுளது ; அடி அலகு தடித்து, மேல் அலகு வளைந்து விளங்கும் கிளி யின் வாயில், பொன்னிறம்போற் பழுத்து விளங்கும் வேப்