பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. ஊண்பித்தை

இவர் பெயர் ஊண்பித்தியார் எனவும் வழங்கப்பெறும். புறநானூற்றில் மாற்பித்தியார் என்ற பெயருடைய பெண் பாற்புலவர் ஒருவர் உளர். இவர் பெயரும் பித்தியார் என வருவதைக்கண்டு, இருவரையும் ஒருவராகவே கருதுவர் சிலர் ; அது தவறு. இருவரும் வேறு வேருவர் என்பதை அறிவிப்பதற்காகவே, ஒருவர் பெயர்முன் ஊண் என்பதை யும், மற்ருெருவர் பெயர்முன் மால் என்பதையும் சேர்த்து, ஊண்பித்தியார், மாற்பித்தியார் என வழங்கியுள்ளார்கள் ; மேலும் இவர்பெயர் ஊண்பித்தி என்றே பெரும்பாலான எடுகளில் காணப்படுகிறது; இவர் வரலாறுபற்றிய எதையும் தெரிந்துகொள்ள வழியில்லை.

இல்லறம் இனிது ஆற்றவேண்டும்; அதற்கு நிறையப் பொருள் வேண்டும் என்ற எண்ணமுடையவனுய் வெளி நாடு சென்ற கணவன், வருவேன்' என்று கூறிச் சென்ற காலத்தில் வந்திலன் ; அதனுல் வருந்திய அவன் மனைவி, “ அவர் என்னே கினைந்திலர் ; மறந்துவிட்டார் ” என்று வருந்தினுள். ஆல்ை, அவன் இயல்பை நன்கு உணர்ந்த வள் அவள் தோழி. அவன் அவளே மறவான் என்பதை உணர்ந்தவள். சென்ற தொழில்கினேவால், அவன் ஒரு வேளே மறப்பினும், சென்றவழியில் அவன் கண்ட காட்சி அவனே மறக்கவிடாது; மாருக, தலைவியை என்றும் கினேப் பூட்டி, வீடுகோக்கி விரைந்து வருதல்வேண்டும் என்பதை அறிவுறுத்தும் தன்மையுடையது. வழியில் ஒர் ஆண்மான், மால் என்ற செடியை வயிருர மேய்ந்துவிட்டு, அருகே யுள்ள யாமாத்தின் கிழலையடைந்து கவலையின்றி உறங்கு வதைக் கண்டுகொண்டே சென்றுள்ளான். அக் காட்சி அவன் உள்ளத்தை உறுத்தாகிறாது ; தான் விரும்பிய உணவை வேண்டிய அளவு உண்டதும், அங்கேயேயிருந்து உழலாது, நிழலிடம் தேடிப் படுப்பதைப்போல், நாமும் வேண்டிய பொருளே ஈட்டிக்கொண்டு விரைவில் வீடுவந்து சேர்தல்வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்கு உணர்த்