பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒக்கூர் மாசாத்தியார் 19

அவள் உள்ளம் ; உடனே அறிந்துகொள்ளத் துடித்தாள் ; ஆகவே, அண்மையில் கிடந்த உயர்த்த கல்மீது ஏறி கின்று பார்த்து அறிந்துகொள்ளலாம் வா எனத் தோழியை அழைக்கிருள். தலைவியின் உள்ளத்துடிப்பை புணர்த்தும் ஒரு செய்யுள் :

' முல்லை பூர்ந்த கல்லுய ாேறிக்

கண்டனம் வருகம் சென்மோ தோழி ! எல்லூர்ச் சேர்தரும் எறுடை யினத்துப் புல்ஆர் நல்ஆன் பூண்மணி கொல்லோ! செய்வினை முடித்த செம்மல் உள்ளயொடு வல்வில் இளேயர் பக்கம் போற்ற ஈர்மணல் காட்டாறு வரூஉம் தேர்மணி கொல் 'ஆண்டு இயம்பிய உளவே.”

(குறுக் . உஎடு) தலைவியின் ஆர்வ உள்ளத்தைக்காட்டிய மாசாத்தி யார், தலைவனின் விரைவுள்ளத்தையும் அவன் உள்ளம் அறிந்து ஒட்டும் தேர்ப்பாகனேயும் நமக்கு அறிவிக்கும் முறை சாலச்சிறந்தது. வங்த வேலே முடிந்ததும், வீடு அடைவதில் பெருவிருப்புடையன் தலைவன் என்பதை அறி வான் பாகன் ; ஆகவே, தேரை விரைந்து ஒட்டிவந்து தலே மகளின் வீட்டு வாயிலில் கிறுத்தி, 'இறங்குக' என்று தலைமகனே நோக்கிக் கூறினன். அதுகேட்ட தலைவன் வியப்புற்றுக் கூறுகிருன் : பாக! தேர் ஏறியதுதான் எனக்குத் தெரியும் ; தேர் ஒடியதாகவே எனக்குத் தோன்றவில்லை ; இதோ, தலைவியின் விட்டின்முன் கிறுத்தி விட்டு இறங்குக' என்ற சின் சொல் கேட்டு வியப் புற்றேன் ; வாயுவேகம், மனுேவேகம் என்பார்களே, அப் படியல்லவோ வந்திருக்கிறது தேர் ஒருவேளை காற்றையே குதிரையாக மாற்றிப் பூட்டிக்கொண்டனேயோ? அல்லது. உன் மனத்தையே குதிரையாகமாற்றிப் பூட்டி ஒட்டினேயோ? எவ்வாறு இவ்வளவு விரைவில் வந்தது தேர் ' என்று பாராட்டிக்கொண்டே, தோளோடு தழுவி அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விருக்களித்து மகிழ்ந்தான்.