பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெண்பாற் புலவர்கள்

போல், மனேவியின் துயர் சிறிது குறைதலும் கூடும் என்ற பொருள்பட்டுத் தலைவியின் துயர் குறைந்து தோன்றும். ஆகவே, ஒய்வின்றித் தொழிலாற்றும் துருத்தி என்று அறிவிக்க விரும்புகிருர், ஒர் ஊருக்கு ஒரு உலையாயின் தொழில் குறைந்திருக்கும்; பல ஊர்களுக்கும் சேர்த்து ஒரு உலையானல், அதற்குச் சிறிதும் ஒய்வே இராது. ஆகவே, தலைவியின் துயர்க்கு எழுர்க்குமாக ஒர் ஊரில் அமைந்த ஒர் உலேயினே உவமை கூறினுள்.

எழுர்ப் பொதுவினைக்கு ஒரூர் யாத்த உலைவாங்கு மிதிதோல் போலத் தலைவரம் பறியாது வருந்தும் என்செஞ்சே,

- (குறுந்: க.எஉ.)

இதல்ை, தலைவியின் துயர் மிகுதி உணர்த்தப்படுதலோடு, பண்டைத் தமிழகத்தின் வாழ்க்கை அமைப்பு முறைகளில் ஒன்றும் விளங்குகிறது. ஊர்தோறும் ஒரு உலை வைத் தால், போதியதொழில் கிடைக்காது கொல்லன் வாழ்க்கை கிாம்பாது போகும். அதனல் பல ஊர்களுக்கும் நடுவிட மாக அமையும் ஒர் ஊரில் அவன் உலை வைத்துக்கொள்ள, அவ்வூரைச் சூழ உள்ள மக்கள் அனேவரும் அவ்வொருவ னிடத்திலேயே, தம் தொழிலுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வாராயினர். இத்ளுல் வேண்டிய தொழி லேப் பெற்று அவனும் வளமாக வாழ்வான்; இது பழங் தமிழர் கண்ட பண்டைக்காலச் சிற்றார் அமைப்பு முறையாம்.